லிபியாவில்
விமானம் கட்டிடத்தின் மீது மோதல்
5 பேர் பலி
லிபியாவில்
விமானப்படை போர்விமானம் ஒன்று கட்டிடம் மீது
மோதியதில் 5 பேர் பலியாகினர் என அறிவிக்கப்படுகின்றது.
லிபியாவின் கிழக்கு
நகரான டாப்ரக்
நகரில் போர்விமானம்
ஒன்று விழுந்து
விபத்துக்குள்ளானது. விமானம் தொழில்நுட்ப
கோளாறு காரணமாக
விபத்துக்குள் சிக்கியது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானப்படை போர்விமானம் மோதியதில் விமானி உட்பட
5 பேர் பலியாகி
உள்ளனர். விமானம்
விபத்துக்குள்ளானது தொடர்பான வீடியோ
வெளியாகியுள்ளது. பெங்காசியில் போராளிகள் மற்றும் அரசு
இடையே கடும்
மோதல் ஏற்பட்டுள்ள
நிலையில் இந்த
விபத்து நடந்துள்ளது.
விபத்து தொடர்பான
வீடியோவை 'ஒன்
ஜீரோ' என்ற
பெயரில் வெளியாகியுள்ள
பேஸ்புக் கணக்கில்
ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அவர் தனது
அடையாளங்களை தெரிவிக்கவில்லை.
ஆபிரிக்க
நாடான லிபியாவில்,
34 ஆண்டுகளாக நடந்து வந்த கடாபியின் ஆட்சியை,
2011–ம் ஆண்டு
உள்ளூர் போராட்டக்குழுக்களின்
உதவியுடன் இராணுவம்
முடிவுக்கு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து
அங்கு தேசிய
இடைக்கால பேரவை
ஆட்சி நிறுவப்பட்டது.
பின்னர் கடந்த
ஜூன் மாதம்
பாராளுமன்றத்தேர்தல் நடந்தது. அதன்பிறகு
புதிய பாராளுமன்றம்
அமைக்கப்பட்டது. ஆனாலும் தலைநகர் திரிபோலி உள்ளிட்ட
பல நகரங்களில்
போராட்ட குழுக்கள்
இடையே மோதல்கள்
நடந்து வருவதால்,
டாப்ரக் நகரில்
பாராளுமன்றம் செயல்பட்டு வருகிறது.
லிபியாவில்
இஸ்லாமியர்கள், இஸ்லாமியர்கள் அல்லாத போராட்டக்குழுக்கள்தான் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு,
நாட்டின் அமைதிக்கு
பங்கம் விளைவித்துக்
கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாக
இந்தக் குழுக்கள்
அடிக்கடி மோதி
வருவதால், தலைநகர்
திரிபோலியும், நாட்டின் 2–வது பெரிய நகரமான
பெங்காஜியும் கலவர பூமியாக மாறி வருகின்றன.
லிபியாவின் விடியல் என்ற போராட்டக் குழுவின்
கட்டுப்பாட்டில்தான் தலைநகர் திரிபோலி
உள்ளது.
0 comments:
Post a Comment