ஒற்றைக் கண்
அதிசய ஆட்டு குட்டி!
துருக்கி
நாட்டில் இஸ்மிர்
நகரத்துக்கு அருகே விவசாயி ஒருவர் ஆட்டு
பண்ணை நடத்தி
வருகிறார். அவரது ஆட்டு மந்தையில் நேற்று
முன்தினம் அதிசய
ஆட்டு குட்டி
பிறந்தது. அந்த
ஆட்டு குட்டி
நெற்றியின் நடுவே ஒரே ஒரு கண்தான்
உள்ளது.அந்த
ஆட்டு குட்டி
ஒரு கண்ணை
வைத்து தன்னிச்சையாக
நடப்பதற்கு சிரமப்படுகிறது. இதனால் அந்த ஆட்டு
குட்டியை கம்பளி
போர்வையால் சுற்றி கையில் வைத்தபடியே விவசாயி
உணவூட்டி வருகிறார்.அந்த அதிசய
ஆட்டு குட்டி
பற்றி தகவல்
அறிந்து சுற்றியுள்ள
ஏராளமான மக்கள்
அதனை வந்து
பார்த்து செல்கின்றனர்
என அறிவிக்கப்படுகின்றது.
ஒற்றை
கண்ணுடன் குட்டி
பிறந்தது குறித்து
கிரம்பி கிராபோ
என்ற விலங்குகள்
நல மருத்துவர்கள்
கூறுகையில் தெரிவித்துள்ளதாவது, அந்த ஆட்டின் மூளை
மற்றும் மண்டையில்
பாதிப்பு ஏற்பட்டு
இருக்கலாம். அதனால்தான் ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ளது.
அத்துடன் நாக்கை
வெளியே நீட்டியபடி
காணப்படுகிறது. ஒற்றை கண் மற்றும் நாக்கு
வெளியே தள்ளுவதால்,
தானாகவே உணவை
சாப்பிட தடுமாறும்.
சிறிது காலத்துக்கு
பிறகு அதுவே
தன்னிச்சையாக உணவை உண்ண ஆரம்பிக்கும் என்று
தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment