ஈராக் ஐ.எஸ்.ஐ.எஸ்.
போராளிகளால்
பாதிக்கபட்ட
வீரர்களின் உறவினர்கள் போராட்டம்
ஈராக்கில்
கடந்த ஜனவரி
மாதம் தொடங்கி
சன்னி முஸ்லிம்
பிரிவைச் சேர்ந்த
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள், ஷியா
முஸ்லிம் அரசு
படையினருக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். போராளிகளின்
தாக்குதலுக்கு ஆயிரகணக்கான் அரசு படை வீரர்களும்
குர்தீஷ் வீரர்களும்
பலியாகி உள்ளனர்.
ஆனால்
ஈராக் அரசு போராளிகளால் பாதிக்கபட்ட வீரகள்
குறித்து முழுமையான
தகவல்களை கொடுக்கவில்லை
என குறை தெரிவிக்கப்படுகின்றது
இதனால்
பாதிக்கப்பட்ட அரசு படையினரின் உறவினர்கள் இன்று
பாக்தாதில் பாராளுமன்றத்திற்குள் புகுந்து
போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்கள் பாதிக்கபட்ட உறவினர்கள்
குறித்து விரிவான
தகவல் வேண்டும்
என போராட்ட
குழுவினர் கோஷம்
எழுப்பினர். போராட்டம் வன்முறையாக வெடிக்ககூடும்
என அச்சமடைந்த
பாராளுமன்ற பாதுகாவலர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களையும்,
அமைச்சர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து
சென்றனர்.
பாக்தாதில் உள்ள அனைத்து சாலைகளிலும் பொலிஸார் குவிக்கபட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போராட்டகாரர்கள் மீது தண்ணீர் பீச்சி அடிக்கும் வாகனமும் நிறுத்தப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment