இலங்கை முஸ்லிம்களின்
அரசியல் தலைமை
கிழக்கு
மாகாணத்தில் இருந்துதான் தோன்ற வேண்டுமா?
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
பிரதேசவாதக் கொள்கைகள் எமது முஸ்லிம் சமூகத்தில் வலுப்பது
இலங்கை முஸ்லிம்களின் அரசியலை சிறுமைப் படுத்தும்..??
இஸ்லாம் எமக்குக் கற்றுத் தந்த சமத்துவம்,சகோதரத்துவம் எங்கே??
சில
காலங்கள் முன்பு
மக்கள் வரட்சியால்
இலைகள் கொட்டி
விறகுக்காவது உதவுமா??என்ற நிலைமையில் இருந்த
மரத்தை தனது
ஆளுமையினால் துளிர் விடச் செய்த மு.கா இன் தலைமையை இன்று
பலரும் விமர்சித்து
வருகிறார்கள்.
யாருமே
மு.கா
தலைமையின் தகுதி,ஆளுமை,ஆற்றல்
பற்றி கேட்பதில்லை,கேட்கவும் முடியாது.மு.கா இன் தலைவர்
அமைச்சர் ரவூப்
ஹக்கீமைப் பொறுத்த
வரையில் சிறு
வயது தொடக்கம்
தன் ஆளுமைகளை
வெளிப்படுத்திய ஒருவர்.பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகம்
வரை அவரின்
பெயர் ஒலித்தமைக்கு
பல வரலாற்றுச்
சான்றுகளை ஆதாரமாய்
காட்டலாம்.அதே
போன்று தான்
அரசியலில் கால்
வைத்தது முதல்
வரலாறு பேசுமளவு
பலவற்றை சாதித்தவர்.
எதுவும்
குறைபிடிக்க இயலாதவர்கள் ஏதாவது குறைபிடிக்க வேண்டுமல்லவா..?கிழக்கு மாகாணத்தவர்கள்
கண்டு பிடித்த
குறை என்ன
தெரியுமா..?எங்கிருந்தோ வந்தவர் எம்மை ஆளுவதா.?கண்டியில் இருப்பவருக்கு
இங்குள்ள தேவை
எப்படி புரியும்..?
மறைந்த
மா மனிதர்
மர்ஹூம் அஸ்ரப்
அவர்கள் எப்
பண்பு தனது
மக்களிடம் உருவாகக்
கூடாது என
அதீத சிரத்தை
எடுத்தார்களோ அந்த பிரதேச வாதத்தை அஸ்ரப்
இன் பாசறையில்
வளந்தவர்கள் என தங்களைக் கூறிக்கொள்வோர்
உட்பட பலர் தூண்டி அரசியல்
இலாபம் காண
இன்று முயற்சித்து
வருவது உண்மையில்
வேதனைக்குரிய விடயமே.
இலங்கையில்
20 இலட்ச முஸ்லிம்களை
அரசியல் ரீதியாக
தலைமை தாங்க
மிகைத்த ஆளுமை
மிக்க ஒருவரே
தேவை.இவ்வாறான
ஆளுமை மிக்கவர்
அங்கும் இங்கும்
என மலிந்து
கிடக்க மாட்டார்.எங்கேயாவது ஒரு
இடத்தில் ஏதாவது
ஒரு மூலையில்
அழுக்குச் சிப்பிக்குள்
காணப்படும் முத்து போன்று காணப்படுவார் அவ்வாறானவர்களை தேர்ந்தெடுக்க
வேண்டுமே தவிர
அழுக்குச் சிப்பியிற்குள்
இருந்து கிடைத்ததால்
முத்தை ஏற்க
மறுப்பது அறிவுடமையல்ல.அறிவுடமை என்று
யாரும் உரைக்கப்
போவதுமில்லை.
இஸ்லாம்
அதீதம் சகோதரத்துவத்தை
வலியுறுத்துகின்ற ஒரு மார்க்கம்.அவ்வாறான மார்க்கத்தில்
நாம் இருந்து
கொண்டு
அரசியல் இலாபம் காண்பதற்காய் பிரதேச வாதத்தை
தூண்டி பிரதேச
வாதத்தால் எம்
சகோதரத்துவத்தின் ஸ்திரத் தன்மை குறைக்க விளைவது
இஸ்லாமிப் பார்வையிலும்
மிகப் பெரிய
குற்றமும் கூட.
இலங்கை
முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதிதான் கிழக்கு
மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.மற்றய இரண்டு
பகுதியும் கிழக்கு
மாகாணத்திற்கு வெளியே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.3
இல் ஒன்றில்
இருந்து தலைமையை
எதிர்பார்ப்பது நியாயமா..?அல்லது,மூன்றில் இரண்டில்
இருந்து அரசியற்
தலைமையை எதிர்பார்ப்பது
நியாயமா..?எதில்
அதீத வாய்ப்புள்ளது..?
தலைமை
கிழக்கு மாகாணத்தில்
இருந்து தோன்றினால்
அதனை ஏனைய
மாகாணத்தார்கள் ஏற்க வேண்டும்.வேற்று மாகாணத்திலிருந்து
தலைமை தோன்றினால்
கிழக்கு மாகாணத்தவர்கள்
ஏற்க மறுத்தால்
இஸ்லாம் எமக்கு
கற்றுத் தந்த
சமத்துவம் எங்கே??ஏனைய மாகாணத்து
தலைமையை நீங்கள்
மறுக்கும் போது
உங்கள் தலைமையை
அவர்கள் ஏற்பார்களா??ஏற்கத்தான் கூறுவது
எங்கனம் நியாயம்??
இவ்வாறான
கொள்கைகள் எமது
சமூகத்தில் வலுப்பது இலங்கை முஸ்லிம்களை அரசியலில்
பல கூறுகளாக
பிரிக்க வித்திடும்
என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.எமது
அரசியல் வாதிகளின்
தற்போதைய இயக்க
தன்மைகளுக்குள் இவைகளும் சவாலாக அமைந்தால்,முஸ்லிம்கள்
இலங்கை நாட்டை
விட்டு
வெளியேறி வேறிடம் செல்ல தயாராக வேண்டியதுதான்.
சரி,கிழக்கு மாகாணத்தில்
அதிகப்படியான முஸ்லிம்களை கொண்ட மாவட்டம் அம்பாறை
அதில் அதிகப்படியான
முஸ்லிம்களை கொண்ட ஊர் சம்மாந்துறை.கிழக்கு
மாகாணத்தில் அதிகம் முஸ்லிம்கள் வாழ்வதால் தலைமையை
கிழக்கிலிருந்து தலைமை தோன்றம் பெற வேண்டும்
என நீங்கள்
கோரினால்,கிழக்கில்
அதிக முஸ்லிம்களைக்
கொண்ட மாவட்டமான
அம்பாறையில் அதிக முஸ்லிம்களை கொண்ட ஊரான சம்மாந்துறையில்
இருந்து தான்
தலைவர் வர
வேண்டும் என்று
நான் எனதூர்
சார்பாக
கோரினால் நீங்கள் ஏற்பீர்களா..?
இப்படியே
ஒவ்வருவரும் தங்களுக்குச் சார்பான விதத்தில் நிறுவல்களை
அமைத்தால் நிலைமை
எங்கே செல்லும்??சற்று சிந்தியுங்கள்.
சகோதரர்களே..!
பிரதேச வாதம்
வேண்டாம்.அது
எம்மை அழித்துவிடும்.வெறுமனே,அரசியல்
இலாபம் காண
எம்மவர்கள் பிரதேச வாதத்தை தூண்டுகிறார்கள். எங்கிருந்து தகுதியான தலைமை தோன்றினாலும்
அதனை ஏற்போம்.
வரவேற்போம்.
0 comments:
Post a Comment