தமிழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள்
பிரச்சினைக்கு தீர்வு கோரி கல்முனையில் ஆர்ப்பாட்டம்!


கல்முனை மாநகர தமிழ் முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு கோரி இன்று 2014.09.03 ஆம் திகதி  புதன்கிழமை கல்முனை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கல்முனை தமிழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.
இதன் பிரகாரம் தமிழ் முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாடத்திற்கு முன்னதாக அம்பாறையில் இருந்து வருகை தந்திருந்த தேரர் ஒருவர் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் தமிழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுடன் முக்கிய சந்திப்பொன்றை நடாத்தி அவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top