முஸ்லிம்களுக்கு எதிரான மூன்று காட்டிக் கொடுப்புக்கள்..!!

(துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்)

"வாய்க்குள் இருக்கும் வரை பேச்சு நமக்கு அடிமை அந்தப் பேச்சானது வெளியே வந்து விட்டால் அந்தப் பேச்சுக்கு நாம் அடிமை "என்ற கருத்தை அடிக்கடி உள்ளத்தில் நிறுத்தி செயற்பட வேண்டிய மிக இக்கட்டான சூழ் நிலையில் நாம் வாழ்ந்து வருவது யாவரும் அறிந்தததே!
எனினும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிலர் அதனை மறந்து சில வாய் வழிக் காட்டிக் கொடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
1.ஹஜ் முகவர்கள் காட்டிக் கொடுப்பு
ஹஜ் முகவர்கள் பொது பல சேனா அமைப்பை சந்தித்ததை விட,சந்தித்த பிறகு "பொது பல சேனா அமைப்புடன் தங்களுக்கு ஏற்பட்டுள்ள உறவு முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை பயக்கும்"என்று கூறியது மிகப் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது.
இன்று முஸ்ளிம்களிம்களின் மீது வன் முறைகளை கட்டவிழ்த்திருக்கும் பொது பல சேனா அமைப்பை முஸ்லிம் சமூகம் உட்பட பல சமூகங்களிற்கு நன்மை செய்யும் ஒரு அமைப்பாக இவர்களது இக் கூற்று சித்தரித்துள்ளது என்றால் மிகையாகாது என்றே கூற வேண்டும்.
இவ்வாறான கூற்றுக்களை குறிப்பாக இலங்கை வாழ் பேரின மக்கள் உட்பட உலக மக்களிடம் பொது பல சேன அமைப்பு கொண்டு சென்றுதங்களிற்கு முஸ்லிம்களிடத்திலும் பாரியதொரு ஆதரவு உள்ளது, இன்று முஸ்லிம்கள் சிலர் கூறுவது போன்று தாங்கள் முஸ்லிம்களிற்கு எதிரானவர்கள் அல்ல, முஸ்லிம்களிடத்தில் நடக்கும் அநீதிகளையே நாங்கள் தட்டிக் கேட்கிறோம்என நிருபிக்கும் ஒரு கருவியாக இதனைப் பயன்படுத்தும் என்பதில் எவ் வித ஐயமுமில்லை.
2.முதலமைச்சர் நஜீப் .மஜீதின் காட்டிக் கொடுப்பு
கருமலையூற்று பள்ளிவாயல் விவகாரம் தொடர்பில் அனைவரும் வேண்டுமென்று இடிக்கப்பட்டுள்ளது என ஒருமித்து குரல் கொடுத்த போது.எமது கிழக்கு மாகாண முதலமைச்சர் இடிந்து விழுந்திருக்கலாம் என பி.பி.சி இற்கு பேட்டி கொடுத்துமுஸ்லிம்கள் எதுக்கெடுத்தாலும் அரசு,பேரின மக்கள் தலையில் போடுவது வழமையாகி விட்டதுஎன வெளிப்படுத்தி உள்ளார்.
"ஏன்டா?நம்மடையானுகள் தேவை இல்லாம அவங்கட பள்ளிய உடைக்கானுகள்?"
என்ற மனோ நிலையுடன் இருக்கும் பேரின மக்களிடத்தில்,முஸ்லிம்கள் மீது எதிர்ப் போக்குடையவர்கள் இக் கருத்தை கொண்டு சேர்த்து
"பார்ரா!அவனுகளே என்ன சொல்றான் என்று"
எனும்போது
"என்னடா இவனுகள் எதுக்கெடுத்தாலும் நம்மளையே சொல்றான்"
என முஸ்லிம்களின் மீது சார்புப் போக்கைக் கடைப்பிடித்தோர் முஸ்லிம்களின் மீது அதிருப்தியுற்று,எதிர்ப் போக்கை கடைப்பிடிக்க இக் கருத்து வழி சமைக்கும்.
3.தேசிய சுதந்திர முன்னணி இன் ஊடகப் பேச்சாளர் முஸம்மிலின் காட்டிக் கொடுப்பு
ஹபாயா பிரச்சனை தலை விரித்தாடுகின்ற போது ஹபாயா முஸ்லிம் சமூகத்திற்கு தேவைதானா??யாவரும் போன்றே சேலை அணிந்து தலையையும் மறைக்கலாமே எனக் கூறி பொது பல சென அமைப்பின் முஸ்லிம்கள் ,மீதான செயற்பாட்டிற்கு பூரண அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
இவரது இக் கருத்தை செவியுறும் பேரின மக்கள் "பொது பல சேனா முஸ்லிம்களினது கலாச்சாரம் சிலவற்றை ஒழிக்க பாடு படுவது சரி தான்"என்ற நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.

இப்படி மூவரும் மூவகைக் காட்டிக்கொடுப்பை மேற்கொண்டுள்ளார்கள். இதில் மக்கள் விளங்க வேண்டிய மிக முக்கியமான ஒரு விடயம்.இவர்கள் மூவரும் மக்களை நம்பி பிழைப்பு நடாத்துபவர்கள்.இவர்களிற்கு ஆதரவளிப்பவர்கள் நிச்சயம் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top