வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க உதவும்
வாட்ஸ்அப்பும் சமூக தளங்களும்

பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டவை என்று கூறப்பட்டு வந்த முகநூல், டிவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற தொழில் நுட்பங்கள் தற்போது காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேருதவியாக உள்ளன என அறிவிக்கப்படுகின்றது.
இது குறித்து இராணுவ அதிகாரிகள் கூறுகையில், சமூக தளங்களின் மூலம் இராணுவத்துக்கும், மீட்புப் படையினருக்கும் வெள்ளத்தில் சிக்கியர்கள் பலரும் தொடர்ந்து கொண்டு தங்களது நிலை குறித்து தெரிவிக்கின்றனர்.
அவர்கள் சிக்கியிருக்கும் இடம் குறித்து கேட்டறியப்பட்டு, மீட்புக் குழுவினருக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தியை தெரிவித்து உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல இடங்களில் தொலைபேசி இணைப்புகள் முற்றிலும் செயலிழந்து விட்ட நிலையில் இதுபோன்ற சமூக தளங்கள், வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை எளிதாக மீட்க பேருதவியாக இருப்பதாகவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரத்யேகமாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் உதவிகள் கோரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் வெள்ளத்தில் சிக்கியதால் மரத்தைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு உயிர் பிழைக்கப் போராடும் இருவர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top