அல் குவைதா அமைப்பின் கிளை இந்தியா நிறுவலுடன் தொடர்பான
ஓர் சிறு பார்வை..!!

(துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்)

பல நாட்களின் பின் மக்களிடம் தோன்றிய அல் குவைதா அமைப்பின் தற்போதைய தலைவரான அய்மன் அல் ஜவாகிரி தங்கள் கிளைகளை  இந்தியா,பர்மா,இந்தனோசியா போன்ற நாடுகளிலும்  நிறுவப்போவதாக அதிரடி அறிக்கையை வெளியிட்டு பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மாத்திரமின்றி எச்சரித்தும் உள்ளார்.
பாக்கிஸ்தானில் அல் குவைதா,தாலிபான் அமைப்புக்களின் தாக்கம் மிகைத்துக் காணப்பட்ட போதிலும் பாகிஸ்தானை அண்டிக் காணப்படும் இந்தியா நாட்டில் அல் குவைதா இனது  தடம் பதித்தலுக்கு  பாக்கிஸ்தானின் அமைவிடம் அதிக சாதகமாக இருந்தும் இது வரை காலமும் தனது அமைப்பின் ஆதிக்கத்தை நிறுவ வேண்டும் என சிந்தனை கொள்ளாத அல் குவைதா அமைப்பானது தற்பொழுது திடீர் என இவ்வாறான செய்தியை மக்களிற்கு விடுத்திருப்பதானது  பல விதமான சிந்தனைகளை உள்ளத்தில் கருக்கொள்ளச் செய்துள்ளது.
முதலாவதாக இச் செய்தி எந்தளவு?உண்மைத் தன்மை வாய்ந்தது என்பதை நாம் நோக்க வேண்டும்.இது வரையிலும் இச் செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி  ஊர்ஜிதப்படுத்தப் படவில்லை.இந்திய அரசு இதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த உத்தர விட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் உள்ள முஸ்லிம்களிற்கும் ஏனைய மதத்தவர்களிற்குமிடையிலான உறவை சீர் குலைத்து அதில் இலாபமடைய நினைக்கும் உலக நாடுகளின் சூழ்ச்சிகளுள் ஒன்றாக கூட சில வேளை இது இருந்து விடலாம். ISIS அமைப்பு பற்றி முன்னுக்குப் பின்வருகின்ற பல்வேறு முரண்பட்ட செய்திகளை வைத்துப் பார்க்கும் போது அதன் தொடர்வரிசையில் உலக நாடுகளால் அரங்கேற்றப்படும் ஒரு நாடகமாக இது இராது என ஒரு போதும் அடித்துக் கூறி விட இயலாது.
இவ் அறிக்கை மூலம் இந்தியப் பிரதமர் மோடியை மக்களிடையே முஸ்லிம்களின் விரோதியாக சித்தரிக்க விளைவதும் அல் குவைதா அமைப்பின் ஒரு நோக்கம் என பலரும் ஆரூடம் தெரிவித்து வருகின்ற போதும்,இந்தியப் பிரதமர் மோடியை மக்களிடையே முஸ்லிம்களின் விரோதியாக சித்தரிப்பதன் மூலம் அல் குவைதா அமைப்பிற்கு கிடைக்கும் இலாபம் என்ன?என்ற வினா இக் கருத்தை தவிடு பொடியாக்குகிறது என்றே கூற வேண்டும்.
இவ் அறிக்கை இசிஸ் அமைப்புடன் அல் குவைதா அமைப்பிற்கு ஏற்பட்ட போட்டித் தன்மையே பிரதான காரணமாக அமைந்திருக்கலாம் என்றே நம்பப்படுகிறகு.இசிஸ் அமைப்பானது அல் குவைதா அமைப்பின் பின்னர் தோற்றம் பெற்ற அமைப்பாகும்.மிகக் குறுகிய காலம் முன்பே மக்கள் மத்தியில் பிரபலமானது.மீடியா துறையின் பங்களிப்புடன்  அபரிதமான மக்கள் ஆதரவைப் பெற்று வருகிறது.அமெரிக்க 100 இளைஞர்கள் இசிஸ் அமைப்புடன் இணைந்துள்ளதாக பெண்டகனே அறிவித்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.உலக முஸ்லிம்கள் பலர் பல நாடுகளில் இருந்தும் இவ் அமைப்புடன் இணைந்து வருகிறார்கள்.உலகின் உள்ள போராட இயக்கங்களிற்குள் மிகவும் பணக்கார அந்தஸ்தையும் isis  தன் வசப் படுத்தி உள்ளது.அதி நவீன தொழில்நுட்ப ஆயுதங்கள்,சிரியாவின் விமான தளத்தை கைப்பற்றி அங்குள்ள விமானங்களையும் தன் வசப்படுத்தியுள்ளது.
இவ்வளவு நாளும் மக்கள் மத்தியில் சிங்கமாய் திகழ்ந்த அல் குவைதா அமைப்பானது “isis இன் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியே உலக முஸ்லிம்களின் ஒரே தலைவர்,isis அமைப்பே ஒரே ஒரு இயக்கம்" என்ற isis இன் அடிப்படைக் கொள்கைச் செயற்பாட்டாலும்,அதன் குறுகிய கால அபரிதமான  வலிமையாலும் சற்று நலிவடைந்து வருகிறது. தங்களைப் போன்றல்லாது ISIS  நேரடியாக யுத்த வழி முறையைக் கைக் கொண்டு பல பிரதேசங்களை முற்றாக தன் வசப்படுத்தி உள்ளதால் தங்கள் ஆதிக்கத்தை கிஞ்சித்தும் செலுத்த முயாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு அல் குவைதா அமைப்பு தள்ளப்பட்டுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் அல் குவைதா முஸ்ளிம்களிற்காக உண்மையாக போராடி அமேரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை இன்று வரை கதிகலங்கச் செய்து கொண்டிருக்கும் சிங்கம் என்றாலும் மிகையாகாது என்றே கூற வேண்டும்.
isis அமைப்பை மிஞ்சி அல் குவைதா தனது ஆதிக்கத்தை உலகில் நிலைநாட்ட isis  அமைப்பு வெளியிட்ட வரைபடத்தில் குறிப்பிட்ட பிரகாரம்  அது தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முன்பு அல் குவைதா அமைப்பு தனது ஆதிக்கத்தை இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் நிலை நாட்ட வேண்டும்.அவ்வாறில்லாவிட்டால் இளைஜர்கள் மத்தியில் மிகப் பெரிய பேசு பொருளாக மாறியிருக்கும் இசிஸ் இனது செயற்பாட்டால் அல் குவைதா இனால் போராட்ட குணமுடைய இளைஜர்களை கவரவோ,தங்கள் பக்கம் ஈர்கவோ சிறிதும் முடியாது போய்விடும்.
இதன் விளைவாக தங்களது சர்வதேச அளவிலான ஆதரவு,உதவி போன்ற பலவற்றை இழக்கும் நிலைக்கு அல் குவைதா அமைப்பு தள்ளப்படும்.
மேலும், அல் குவைதா  இனது கோட்டையாய்  ஈராக்,ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளை குறிப்பிடலாம்.ஈராக்கில் உள்ள தங்களது தளம் பலவற்றை isis  இடம் இழந்து வருவதாலும் ஆப்கானிஸ்தான் இற்கு இசிஸ் இனது அச்சிறுத்தல் மிகவும் அன் மித்து இருப்பதாலும் தங்களுக்கென்று வேறு ஒரு தளத்தையும் தயார்படுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலையும் இவ் அமைப்பிற்கு உள்ளது.இதற்கு பாக்கிஸ்தானை மையப்படுத்தி தங்களுக்கென்ற ஒரு சாம்ராஜ்ஜியத்தை அமைத்துக் கொள்ள,முஸ்லிம்கள் சில,பல வழிகளில் ஒடுக்கப்பட்ட போதும் முஸ்லிம் போராட்டக் குழுக்களின் செல்வாக்கு எதுவுமின்றிக்  கிடக்கும் ஆசியாக் கண்டமே மிகவும் பொருத்தமான அமையும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top