சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு
மனித உரிமைகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம்

இலங்கை அரசு வேண்டுகோள்

சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மனித உரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், புதிய ஆணையாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபை என்பது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கும் ஒரு அமைப்பாக மாறிவிட்டது. இவ்வாறானதொரு அமைப்பில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துடனும் அரசாங்கம் இணங்கமாட்டாது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில நாடுகள் எமக்கு ஆதரவாக உள்ளன. அந்த நாடுகளுக்கு எமது பிழையற்ற நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திக் கூறியுள்ளோம். நவநீதம் பிள்ளையோ அல்லது புதிய ஆணையாளரோ இலங்கை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பின்னர் அதற்கான பதிலை நாம் வழங்குவோம். இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையொன்றை கொண்டுவரும் அளவுக்கு எந்தவிதமான பிழையையும் அரசாங்கம் மேற்கொள்ள வில்லை என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு சரியானதொரு வரை விலக்கணத்தை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும். மேலைத்தேய நாடுகளுக்கு எதிராக செயற்படுகின்ற மத அமைப்புகள் சிலவற்றை மாத்திரமே பயங்கரவாத அமைப்பு என்றும் ஏனையவற்றை விடுதலை இயக்கம் என்றும் சித்தரிக்கின்றனர். பயங்கரவாதம் என்பதற்கு சரியானதொரு வரைவிலக்கணம் உருவாக்கப்பட வேண்டும். இதனையே நாம் ஐக்கிய நாடுகள் சபையிடம் தொடர்ந்தும் கோரி வருகின்றோம் என் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top