மனித உரிமை
மீறல் குறித்த புகார்
ஐ.நா.வில் இன்று இலங்கை விளக்கம்
இலங்கையில்
விடுதலைப் புலிகளுக்கு
எதிராக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட
இராணுவ நடவடிக்கைகளின்போது,
மனித உரிமைகள்
மீறப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு,
ஐ.நா.
மனித உரிமை
ஆணையத்தில் இலங்கை அரசு இன்று திங்கள்கிழமை (செப்டம்பர்
8) விளக்கம் அளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா. மனித
உரிமை ஆணையத்தின்
27ஆவது அமர்வுக்
கூட்டம் ஜெனீவாவில்
திங்கள்கிழமை தொடங்குகிறது. அதில், இலங்கை மீதான
குற்றச்சாட்டுகளுக்கு ஜெனீவாவில் உள்ள
இலங்கைத் தூதர்
ரவிநாத் ஆரியசிங்க
விளக்கம் அளிக்க
உள்ளார்.
இலங்கை
மீதான மனித
உரிமை மீறல்
புகார்கள் தொடர்பாக,
சர்வதேச அளவில்
சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்த வேண்டும்
என்று ஐ.நா.வில்
கடந்த மார்ச்
மாதம் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. ஆனால், சர்வதேச
விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்றும், ஐ.நா. விசாரணைக்
குழுவினருக்கு விசா வழங்க மாட்டோம் என்றும்
இலங்கை கூறி
வருகிறது.
இலங்கைக்கு
எதிராக தீர்மானம்
நிறைவேற்றப்பட்ட பிறகு, ஐ.நா. மனித
உரிமை ஆணையம்
கூடுவது இதுவே
முதல் முறையாகும்.
இதனிடையே,
அந்த ஆணையத்தின்
புதிய தலைவராக
பொறுப்பேற்றுள்ள செயித் அல் ஹுசைன் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மறுசீரமைப்பு
பணிகளை மேற்கொள்ளவும்
இலங்கை அரசு
ஒத்துழைப்பு கொடுப்பதை வரவேற்கிறேன். இலங்கையில் மனித
உரிமை அமைப்புகளைச்
சேர்ந்தவர்கள் தற்போது அச்சுறுத்தலில் இருப்பதாகக் கிடைத்த
தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன
என்று செயித்
அல் ஹுசைன்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment