இலங்கையில்
ஜப்பான் பிரதமர்
தெற்காசியக் கண்டத்தில்
சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில்
இவரது இலங்கைப் பயணம்
முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஜப்பான்
பிரதமர் ஷின்ஸோ
அபே, 2 நாள்
பயணமாக இலங்கை
வருகை தந்துள்ளார். கொழும்புக்கு நேற்று 7 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை வந்த அவரை, ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ நேரில் சென்று வரவேற்றார்.
பண்டாரநாயக்க
சர்வதேச விமான
நிலையத்தில் ஜப்பான் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட 2ஆம்
கட்ட மேம்பாட்டு
பணிகளை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து ஜப்பான் பிரதமர் அபே தொடங்கி வைத்தார்.
இலங்கைக்கு
அதிக அளவு
நிதியளிக்கும் நாடாக ஜப்பான் உள்ளது. மனித
உரிமை மீறல்
பிரச்னையில், இலங்கைக்கு எதிரா க ஐ.நா. மனித உரிமைகள்
ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, ஜப்பான்
நடுநிலை வகித்தது.
கடந்த
24 ஆண்டுகளில், இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானின்
முதல் பிரதமர்
ஷின்ஜோ அபே
ஆவார். தெற்காசியக்
கண்டத்தில், ஜப்பானின் பரம எதிரி நாடாக
கருதப்படும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக
கூறப்படும் நிலையில், அவரது இலங்கைப் பயணம்
முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment