தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில்
10 பேர் மாத்திரம் வீடு வீடாக செல்லவும்
பொலித்தீன் பயன்படுத்த வேண்டாம்
கட்சி செயலாளர்களுடனான கலந்துரையாடலில்தெரிவிப்பு
எதிர்வரும்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில், அரசியல்
கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும்
இடையில் இன்று
(27) காலை விசேட
கலந்துரையாடல் ஒன்று
இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின்போது,
தேர்தல் பிரச்சார
நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில்
தேர்தல் ஆணைக்குழுவின்
தலைவர் மஹிந்த
தேசப்பிரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஐக்கிய மக்கள்
சுதந்திர கூட்டமைப்பின்
பொது செயலாளர்
மஹிந்த அமரவீர
தெரிவித்துள்ளார்.
அதற்கமைய
தேர்தல் பிரச்சார
நடவடிக்கைக்காக வீடு வீடாக செல்லும்போது, ஒரு
தடவையில் 10 பேர் மாத்திரம் செல்லுமாறு தெரிவித்துள்ளதோடு,
சுவரொட்டிகளை ஒட்டுதல் மற்றும் தேர்தல் பிரச்சார
நடவடிக்கைகளின்போது பொலித்தீன் பயன்பாட்டுக்கும்
தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி
சபைத் தேர்தல்
தொடர்பில் தேர்தல்கள்
ஆணைக்குழுவுக்கும் தெரிவத்தாட்சி அலுவலர்கள்,
உதவி மற்றும்
பிரதி தேர்தல்கள்
ஆணையாளர்களுக்கும் இடையில் நாளை
(28) மற்றுமொரு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment