சாய்ந்தமருதில் ஐ.தே.கட்சியின் சார்பில் போட்டியிடும்
வேட்பாளர்களின் வீடுகளை தாக்கியதாகக்
கைது செய்யப்பட்ட
14 சந்தேக நபர்கள் விளக்கமறியலில்
கல்முனை மாநகர சபைக்கு
சாய்ந்தமருது பிரதேசத்தில் ஐக்கிய
தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களின் வீடுகளை தாக்கியதாகச் சந்தேகித்து கைது செய்யப்பட்ட 14 சந்தேக நபர்கள் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள்
இன்று கல்முனை
நீதவான் பயாஸ்
ரசாக் முன்னிலையில்
ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவர்களை
ஒருநாள் விளக்கமறியலில்
வைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கல்முனை
மாநகர சபைக்கு சாய்ந்தமருதில் சுயேட்சையாகப் போட்டியிடும் குழுவொன்றின்
ஆதரவாளர்கள் சிலர் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களான எம்.ஐ.எம்.பிர்தெளஸ் ஏ.சி.யஹியாகான் ஆகியோர்களின் வீடுகளுக்குள் புகுந்து சேதப்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு
அமைய பொலிஸார் 14 பேரை சந்தேகத்தில் கைதுசெய்திருந்தனர்.
இந்த
தாக்குதலில் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள், மின்
விளக்குகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில்
அறிக்கை தாக்கல்
செய்த கல்முனை
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment