வாயால் கவ்வி 17 மா மூடைகளை
30 மீற்றர் தூரம் சுமந்து சாதனை
கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊழியரான ஜனக காஞ்சன முதன்நாயக்க பார்வையாளர்கள் முன்னிலையில் ஒவ்வொன்றும் 50 கிலோ நிறைகொண்ட 17 மா மூடைகளை வாயால் கவ்வி 30 நிமிடங்களுக்குள் 30மீற்றர் தூரம் கொண்டு சென்று கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
ஏற்கனவே இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை நிலைநாட்டியுள்ள அவருக்கு இது மூன்றாவது கின்னஸ் உலக சாதனையாகும். தனது தந்தை ஏற்கனவே ஏழு கின்னஸ் உலக சாதனைகளை நிலைநாட்டியிருப்பதாக கூறியுள்ள அவர் அதனிலும் அதிகமாக 18 கின்னஸ் உலக சாதனைகளை நிலைநாட்டி தாய் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே தனது இலட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வை மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர். எவ்வாறாயினும் இரண்டு 50 கிலோகிராம் நிறை கொண்ட மா பைகளை அவரால் முழுமையாக 30 மீற்றர் தூரம் கொண்டு செல்ல முடியாமையினால் அவை சாதனையாக கருதப்படவில்லை.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர், பார்வையாளர்களால் எடுக்கப்படும் ஔிப்பதிவு நாடா கின்னஸ் உலக சாதனை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment