சாய்ந்தமருதை காட்டிக் கொடுக்கப் போவது யார்?
சாய்ந்தமருது
மக்கள் உள்ளூராட்சி
மன்றம் ஒன்றைப்
போராடிப் பெற
வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு
உள்ளாக்கிய அரசியல்வாதிகள் தற்போது அந்த மக்களின்
போராட்டத்தையே மலினப்படுத்தும் உச்சகட்ட துரோகத்தனத்தை நாளை
அரங்கேற்றுவார்களா என்று இந்த
நாடே உற்றுநோக்கிக்
கொண்டு இருக்கின்றது.
அதாவது,
உரிமைப் போராட்டத்திற்கு
கைகொடுத்து உதவி இந்த மக்களின் கோரிக்கையை
வென்றுதராத அரசியல் கட்சிகளே, அரசியல் கட்சிகளை
புறந்தள்ளி இந்த ஊரை ஒழு சுயேற்சைக்
குழுவை களமிறக்கும்
அரசியலுக்குள் இழுத்துச் சென்றன.
கல்முனை
மாநகர சபைக்கான
வேட்புமனு தயாரிப்பு
பணிகள் இறுதிக்
கட்டத்தை அடைந்துள்ள
இந்நிலையில்
சில அரசியல்
கட்சிகள் தமது
வேட்பாளர்களை சாய்ந்தமருதில் நிறுத்துவதில்லை
என்று திட்டவட்டமாக
அறிவித்துள்ளன.ஆனால் ஒரு கட்சி மட்டும்
சாய்ந்தமருதில் தனது வேட்பாளர்களை நிறுத்தியே தீருவோம்
என்று வரிந்து
கட்டிக்கொண்டு நிற்பதானது சாய்ந்தமருது மக்களுக்கு இந்த
கட்சி செய்யும்
உச்சகட்ட துரோகமாகவே
இவ்வூர் மக்களால்
நோக்கப்படுகின்றது.
அத்துடன்
ஸ்ரீலங்கா லங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியில் போட்டியிட
தயாராகவிருந்து ஊரின் நலன் கருதி, சாய்ந்தமருது
பிரகடணத்திற்கு மதிப்பளித்து தான் போட்டியிடப் போவதில்லை
என்று அறிவித்துள்ளார்
சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவர். ஆனால் இதே
ஊரைச் சேர்ந்த
சிலர் எப்படியேனும்
இந்த தேர்தலில்
போட்டியிட்டே தீருவோம் என்று சபதம் எடுத்துள்ளமை
பிறந்த மண்ணுக்கு
அவர்கள் செய்யும்
மாபெரும் துரோகம்
என்று பரவலாகப்
பேப்படுகின்றது.
சொந்த
ஊரின் நலனை
குழிதோண்டி புதைத்துவிட்டு தான் பதவிகளை அடைந்துகொள்வதுடன்
தனது கட்சிக்கு
வக்காலத்து வாங்கும் இவர்கள் இந்த ஊரின்
துரோகிகள் என்று
சொல்வதில் நியாயம்
இருக்கத்தான் செய்கின்து.
மேலும்
இவர்கள் தேர்தலில்
போட்டியிட்டு அடையப்போகும் நான்கு வருட அற்ப
பதவிகளுக்காக தமது பரம்பரைக்கே துரோகியின் பரம்பரை
என்ற நாமத்தை
சூட்ட வேண்டுமா
என்று சிந்தித்து
முடிவெடிக்க இன்னும் இருக்கும் 24 மணிநேர அவகாசம்
போதுமானதே.
சாய்ந்தமருது பள்ளித் தலைமையை சத்தித்தார்
ஷெரீப் ஹக்கீம்.
எதிர்வரும்
உள்ளூராட்சி மன்றத் தேர்லில் கல்முனை மாநாகர
சபைக்காக சாய்ந்தமருது
23ம் வட்டாரத்தில்
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸில் போட்டியிடத் தயாராகவிருந்து
சாய்ந்தமருது
மக்களின் போராட்டத்தை
மதித்து
தேர்தலில்
போட்டியிடுவதில் இருந்து விலகிக்கொண்ட பிரபல தொழிலதிபர்
ஷெரீப்
ஹக்கீம் நேற்று 2017.12.19 - செவ்வாய்க்கிழமை இரவு
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர்
மற்றும் நம்பிக்கையாளர்
சபை உறுப்பினர்களை
நூற்றுக் கணக்கான
மக்கள் மத்தியில்
சந்தித்து
தனது எதிர்கால
அரசியல் நிலைப்பாடுகள்
குறித்தும் சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சி மன்ற
இலக்கை நோக்கிய
பயணத்திற்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்க
தயாராகவுள்ளதையும் தெளிவுபடுத்தினார்.
எம்.ஐ.சர்ஜூன்
சாய்ந்தமருது.
0 comments:
Post a Comment