இன, மத துவேசக் கருத்துக்கள்
தேர்தலில் பயன்படுத்த தடை
மீறினால் கைது- பொலிஸ்
மத
ரீதியான அல்லது
இன ரீதியிலான
பிரச்சினைகளுக்குத் தூபமிடும் வகையில்
ஆவேசக் கருத்துக்களைப்
பரப்புவது தேர்தல்
சட்ட திட்டங்களுக்கு
முரணானது எனவும்,
இவ்வாறு பேசுபவர்கள்
தராதரம் பார்க்காமல்
கைது செய்யப்படுவார்கள்
எனவும் பொலிஸ்
ஊடகப் பேச்சாளர்
ருவன் குணசேகர இன்று 27 ஆம் திகதி அறிவித்துள்ளார்.
இதேவேளை,
உள்ளுராட்சி சபைக்காக போட்டியிடும் கட்சிகள் தமது
வேட்பாளர்களுடன் 10 பேருக்கு குறைவான
நபர்களையே வீடு
வீடாக பிரச்சாரப்
பணிகளுக்கு அழைத்துச் செல்ல முடியும் எனவும்,
10 பேருக்கு அதிகமானோர் வீதியில் ஊர்வலமாக செல்வது
சட்ட முரணான
நடவடிக்கை என்பதனால்
சட்டத்தை நடைமுறைப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும் பொலிஸ்
பேச்சாளர் மேலும்
கூறியுள்ளார்
0 comments:
Post a Comment