ஐ.நா
வாக்கெடுப்பில் பலஸ்தீனுக்கு ஆதரவாக
வாக்களித்த
இலங்கை அரசுக்கு
அமைச்சர்
ரிஷாட் நன்றி தெரிவிப்பு!
பலஸ்தீன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐ.நா பொதுச்சபையில் பலஸ்தீனத்தை
ஆதரித்து அமெரிக்காவுக்கு எதிராக, இலங்கை
வாக்களித்திருந்ததை வரவேற்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான
ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கிழக்கு ஜெருசலத்தை, பலஸ்தீன்
நாட்டின் தலைநகராக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி, நேற்று (22) கொழும்பு நகர
மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு
தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது,
ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக, அமெரிக்கா கடந்த 5 ஆம் திகதி வெளியிட்ட
அறிவிப்பை வாபஸ் பெறுமாறு ஐ.நா. பொதுச்சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த
வாக்கெடுப்பில் இலங்கை உட்பட 128 நாடுகள்
பாலஸ்தீனத்தை ஆதரித்தும், 09 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன.
அந்தவகையில் பலஸ்தீன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பலஸ்தீனத்தை ஆதரித்து வாக்களித்தமைக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க ஆகியோருக்கு, இலங்கை வாழ்
முஸ்லிம்களின் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும், பலஸ்தீன மக்கள் தமது
பூர்வீக பூமிக்காகவும், தமது
உரிமைக்காகவும் போராடிகொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில், இவ்வாறனதொரு பிழையான அறிவிப்பை அமெரிக்கா விடுத்துள்ள
போதும், இலங்கையில் பலஸ்தீன
தூதரகத்தை அமைப்பதற்கான இடத்தை இலங்கை அரசு இலவசமாக வழங்கியுள்ளமைக்காக, இத்தருணத்தில்
அரசாங்கத்திற்கு எமது நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
அத்துடன், பலஸ்தீன மக்களின்
நலனுக்காக அனைவரும் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுத்த அமைச்சர் ரிஷாட்
பதியுதீன், கட்சி, இன, மத பேதமின்றி
இந்த மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அனைவரையும் பாராட்டியதோடு, இதனை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டுக் குழுவினருக்கும் தமது
நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த மாநாட்டில் மதத் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்
பலஸ்தீன் நாட்டின் உயரதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-ஊடகப்பிரிவு-
0 comments:
Post a Comment