98 வயதில் முதுகலை பட்டம் பெற்று சாதனை

முதியவர் ஒருவர் தனது 98 வயதில் நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலமாக பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ் குமார் வைஷ்யா என்ற முதியவரே இவ்வாறு முதுகலைப்பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

1980 ம் ஆண்டு வரை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் 1938 ம் ஆண்டு பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். மேற்கொண்டு படிக்க விரும்பம் இருந்தும் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியவில்லை.

அதனால் 2015 ம் ஆண்டு நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டத்திற்காக விண்ணப்பித்தார். அதன்மூலம் மிகவும் அதிக வயதில் முதுகலைப்பட்டத்திற்கு விண்ணப்பித்தவர் என்று லிம்கா சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பெற்றார்.


இந்நிலையில், முதுகலைப்பட்டத்தில் தேர்ச்சி பெற்ற அவருக்கு இந்த ஆண்டு பட்டம் வழங்கப்பட்டது. தள்ளாத வயதில் முதுகலைப்பட்டம் பெற்ற ராஜ்குமார் இளையத் தலைமுறையினர் விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top