நடைபெறவிருக்கும் தேர்தல்
தனியான பி.சபை தேவையா? இல்லையா?
என்ற "சர்வஜண வாக்கெடுப்பேயாகும்..!
சாய்ந்தமருது
மக்களுக்கு உள்ளூராட்சி சபையை நாங்கள் பெற்றுத்
தருவோமென்று சாய்ந்தமருது பள்ளிவாசல்
பரிபாலன சபையிரை
பலமுறை பல
அமைச்சர்களிடம் அழைத்துச் சென்ற மு.காங்கிரஸ்
தலைமை, கடைசிநேரத்தில்
சில காரணங்களை
முன்வைத்து, அந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாதென்று
கைவிரித்த விடயத்தை
நாம் எல்லோரும்
அறிவோம்.
சாய்ந்தமருது
தனியான பிரதேசசபையாக
பிரிக்கப்பட்டால் கல்முனை மாநகர சபையின் அதிகாரம்
மாற்று மத சகோதரர்களின் கைக்குச்
சென்றுவிடும் என்ற விடயத்தை முன்பு அறியாதவர்கள்
போலவும், திடீர்ரென்றுதான்
எங்களுக்கு அந்த ஞானம் வந்தது போலவும்
மு.காங்கிரஸின்
தலைமையும், கல்முனையின் பிரதியமைச்சரும்
கடைசிநேரத்தில் நடந்துகொண்ட விதமானது இரு ஊர்மக்களையும்
உசிப்பிவிடும் செயலாகவே பார்க்கப்பட்டது.
கல்முனை
மக்களின் ஏகோபித்த
ஆதரவை பெற்றிருந்த
மு.காங்கிரஸ்
தலைமை இந்த
விடயத்தில் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டது மட்டுமல்லாமல்,
சாய்ந்தமருது மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாகவும்
கடந்த காலங்களில்
நடந்து கொண்டதன்
விளைவையே இன்று
அறுவடை செய்து
கொண்டிருக்கின்றார்கள்.
அந்த
மக்கள் அபிவிருத்தியிலும்
பின் தள்ளப்பட்டார்கள்,
அதே நேரம்
தங்களால் பூரணமாக
வாக்களித்து பெற்ற மேயர் பதவியையும் பறித்தெடுத்தார்கள்,
இதனையெல்லாம் செய்தது வேறு கட்சியினர் அல்ல,
இந்த மு.காங்கிரஸ் கட்சியினர்தான்
என்பதை யாரும்
மறுக்கமாட்டார்கள். இந்த தீர்க்கதரிசனமற்ற
நடவடிக்கைகள் காரணமாகவே இன்று இந்த நிலைமை
தோன்றக்காரணமாகும். (இதற்கான தகுந்த
பாடத்தை இரு
ஊர் மக்களும்
காட்டியே ஆகவேண்டும்.)
இந்த
நிலைமையில், சாய்ந்தமருது மக்கள் இதுவொரு ஏமாற்று
நடவடிக்கை என்று
கருதிய காரணத்தினால்தான்
தங்களது எதிர்ப்பு
நடவடிக்கைகளை ஊர்மக்களின் ஒத்துழைப்போடு முன்னெடுக்கத் தொடங்கினார்கள்
என்பதையும் நாம் அறிவோம். அப்போது முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
இந்த நிலைமையேற்பட்டதற்காக
எந்தவிதமான மாற்று நடவடிக்கையையோ அல்லது மாற்றுத்
தீர்வையோ முன்வைப்பதற்கு
பதிலாக அமைதியாகவே
இருந்து வருகின்றார்.
இந்த
நிலையில்தான் உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அந்த தேர்தலை
தங்களது தனியான
உள்ளூராட்சி மன்ற கோரிக்கைக்கு உறுதி சேர்க்கும் நோக்கமாக பயன்படுத்த தீர்மானித்த
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம், இந்த தேர்தலில்
சுயேற்சைக் குழுவாக களம் இறங்க முடிவுசெய்துள்ளது.
இந்த
நிலைமையின் உண்மைத்தண்மையை புரிந்து கொண்ட எந்தக்கட்சியும்
சாய்ந்தமருதில் போட்டிக்கு ஆட்களை போட துணிந்திருக்கவில்லை.
ஆனால் மு.காங்கிரஸ் மட்டும்
சாய்ந்தமருதில் தங்கள் கட்சி சார்பான வேட்பாளர்களை
களமிறக்கியுள்ளது.
தங்களால்
ஏமாற்றப்பட்டதாக உணரும் சாய்ந்தமருது மக்களுக்கு எந்தவித
தீர்வையும் முன்வைக்காத மு.காங்கிரஸ் தலைமை,
தேர்தலில் வாக்கு
கேட்பதற்கு மட்டும் வருகின்றார்கள் என்றால், இது
அவர்களின் துணிச்சலை
காட்டுகின்றதா? அல்லது சாய்ந்தமருது மக்களை இன்னும்
மடையர்களாக்கலாம்
என்ற என்னத்தைக்
காட்டுகின்றா? என்பது புரியாத பதிராகவே இருக்கின்றது.
(இன்ஷா அல்லாஹ்
இதற்கு தேர்தலின்
பின் விடைகிடைத்து
விடும்)
இருந்தாலும்
நடக்கப்போகும் தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் பள்ளிவாசல்
நிர்வாகத்தினரின் போராட்டத்தை மதிக்காமல், அவர்களின் சுயேற்சை
குழுவுக்கு வாக்களிக்காமல், எங்களுக்கு
கட்சிதான் முக்கியமென்று
நினைத்து மு.காங்கிரஸுக்கு வாக்களிப்பார்களேயானால்,
மு.காங்கிரஸின்
அந்த வெற்றி
சாய்ந்தமருது மக்களின் நீண்டகால போராட்டத்தின் தோல்வியாகவே
வெளியுலகுக்கு காட்டப்படும். இதன் காரணமாக சாய்ந்தமருதுக்கு
தனியான பிரதேசசபை
என்ற கோரிக்கை
அடியோடு நிராகரிக்கப்பட்டுவிடும்
என்பதில் எந்தவித
சந்தேகமும் கிடையாது எனலாம்.
ஆகவே
இந்த தேர்தல்
சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை
வேண்டுமா? இல்லையா?
என்ற சர்வஜன
வாக்கெடுப்பாகவே கருதப்படப் போகின்றது, இதில் சாய்ந்தமருது
மக்கள் மு.காங்கிரஸிக்கு வாக்களித்தால்
உள்ளூராட்சிசபை வேண்டாமென்றும், சுயேற்சைக்குழுவுக்கு
வாக்களித்தால் உள்ளூராட்சி மன்றம் தேவையென்ற கருத்தே
மேலோங்கி நிற்கும்
என்பதே உண்மையாகும்.
அனேகமாக
இதற்கான தீர்ப்பு
எதிர்வரும் பெப்ரவரிமாதம் பத்தாம் திகதி பின்னேரம்
கிடைத்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது என்பதே
எங்கள் கருத்தாகும்.
பொருத்திருந்து பார்ப்போம்..!
எம்.எச்.எம்.இப்றாஹிம்.
கல்முனை.
0 comments:
Post a Comment