அமைச்சர் ரிஷாட்டுக்கு,
அமைச்சர் சந்திம வீரக்கொடி நன்றி தெரிவிப்பு!
எனது
வேண்டுகோளை உடன் ஏற்று, திக்கும்புர மக்களுக்காக
லங்கா சதொச
கிளையை அமைத்துத்
தந்த அமைச்சர்
ரிஷாட் பதியுதீனுக்கு
எனது மனமார்ந்த
நன்றிகள் என்று
திறன்கள் அபிவிருத்தி
மற்றும் தொழிற்பயிற்சி
அமைச்சர் சந்திம
வீரக்கொடி தெரிவித்தார்.
காலி
மாவட்டத்தின் திக்கும்புர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
லங்கா சதொச
கிளை அங்குரார்ப்பண
நிகழ்வில் பிரதம
அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர்
சந்திம வீரக்கொடி
இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்
சந்திம வீரக்கொடி மேலும் கூறியதாவது,
எனது
தொகுதியான திக்கும்புர
பிரதேசத்துக்கு லங்கா சதொச கிளை ஒன்றை
அமைத்துத் தாருங்கள்
என்று நான்
அமைச்சர் ரிஷாட்
பதியுதீனிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
எனது கோரிக்கையை
உடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர்,
நீங்கள் சதொச
கிளையை அமைப்பதற்கான
இடத்தை ஒதுக்கித்
தருவீர்களேயானால், நான் உடனடியாக
உங்கள் கோரிக்கையை
நிறைவேற்றுவேன் என்றார். நாம் அதற்கான இடத்தை
பெற்றுக்கொடுத்தோம்.
லங்கா
சதொச நிறுவனத்தின்
ஊடாக மக்களுக்கு
நியாயமான விலையில்,
இலகுவான முறையில்
தட்டுப்பாடின்றி பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
ஆகையால் எமது
கோரிக்கையை ஏற்று, எமது மக்களுக்காக லங்கா
சதொச கிளையினை
அமைத்துத் தந்தமைக்காக,
அமைச்சர் ரிஷாட்
பதுயுதீனுக்கும், லங்கா சதொச அதிகாரிகளுக்கும் எமது பிரதேச மக்கள் சார்பாக
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் இவ்வாறு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
இந்நிகழ்வில்
ஐக்கிய தேசியக்
கட்சியின் ஹபராதுவ
தொகுதி அமைப்பாளர்
சட்டத்தரணி தாரக நாணயக்காரா மற்றும் லங்கா
சதொச உயரதிகாரிகள்,
ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.