க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை
அதிகாலை இணையத்தில் வெளியிடப்படும்
கல்விப்
பொதுத் தராதரப்
பத்திர உயர்தரப்
பரீட்சையின் பெறுபேறுகள் நாளை அதிகாலை இணையத்தில்
வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
சனத் பூஜித
தெரிவித்துள்ளார்.
கொழும்பில்
உள்ள பாடசாலைகளுக்கு
நாளை முற்பகல்
10.00 மணிமுதல் பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளது.
கொழும்புக்கு
வெளியே உள்ள
பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் பெறுபேறுகளை பெற்றுக்
கொள்ள முடியும்
என்றும் பரீட்சைகள்
ஆணையாளர் நாயகம்
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் கணித பாட
பரீட்சை வினாத்தாளில், ஒரு
சில கேள்விகளுக்கான புள்ளி வழங்குவதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
கணித பாட
வினாத்தாளுக்கு விடையளிக்கும்போது, மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக, பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கருத்துத் தெரிவித்திருந்தன.
குறித்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரிடம், கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அதற்கமைய கணித
வினாத்தாளை தயாரித்த பரீட்சை பரிசோதகர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டுள்ளதாக கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன் அப்படையில், கணித பாட வினாத்தாளில் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் புள்ளிகள் வழங்கும் விதிமுறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின்இணையதளமான www.doenets.lk முகவரியில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர்தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment