ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
மஹிந்த தான் தலைவராகிறார்
ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியின் தலைமைத்துவப் பதவி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வு, ஜனவரி மாதம் 2 ஆம் திகதியன்று இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான, மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில், இதுவரை எவ்வித பதவிகளையும் வகிக்கவில்லை.
அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் காப்பாளராகவும் இருப்பதுடன், உத்தியோகப்பூர்வமற்ற வகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அவர் ஆதரவு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய உத்வேகத்தை வழங்கவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினரின் சந்தேகத்தை நீக்கும் பொருட்டும், எதிர்வரும் 2 ஆம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீங்கி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை மஹிந்த பொறுப்பேற்க உள்ளார் என தெரியவந்துள்ளது.
இதற்கமைய தமது கட்சியைப் பலப்படுத்தும் வகையிலான சகல நடவடிக்கைகளையும் ஸ்ரீ லங்கா ஐக்கிய பெரமுனவின், பங்காளி கட்சிகளான சிறு கட்சிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இதற்கு இணையாக, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக முக்கிய கூட்டங்களை மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சில அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment