மு. கா. தலையகமான தாருஸ்ஸலாத்தை விட்டு

கவலையுடன் வெளியேறிய யஹியாகான்!

டம்மியாகவே பார்க்கப்படுவதாகவும் தெரிவிப்பு!!

  


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கலந்தாலோசைனக் கூட்டம் கடந்த 19 ஆம் திகதி இரவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது நான் அங்கிருந்து கவலையுடன் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் மேயர் வேட்பாளர் விடயத்தில் ஒருவருக்கு ஒருவர் அடிபிடிப்படும் நிலைமை அங்கு உருவானதையிட்டே முஸ்லிம் காங்கிரஸ் தலையகமான தாருஸ்ஸலாத்தை விட்டு நான் வெளியேறி விட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
                                                                                                                                                                                      
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
 கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் நெருக்கமாகப் பலர் உள்ளனர். அவர்களால் எனக்கு தடங்கல்கள் ஏற்படும் என்ற அச்சம் எனக்குள் தோன்றியிருந்தது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் உள்ள பழையவர்கள் சிலர், இளநீரை தாங்களே குடிக்கவேண்டும்கோம்பைசுமக்க பலர் இருக்க வேண்டுமென்று திரிகிறார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னைப் பயன்படுத்த தவறி விட்டது. என்னை அவர்கள் ஒரு டம்மியாகவே வைத்துள்ளனர். நான் எனது மன வேதனைகளை இன்று யாரிடம் சொல்வது?

கல்முனை மாநகர சபையின் மேயர் வேட்பாளராக என்னை நியமித்திருந்தால் சாய்ந்தமருதில் இன்று ஏற்பட்டுள்ள சவால்களை முறியடித்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top