சாய்ந்தமருதில்

சுயேட்சைக் குழுவினரின் பாரிய வாகனப்பேரணி

கல்முனை மாநகரசபைக்கு போட்டியிடும் சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவினரின் பாரிய வாகன ஊர்வலம் மாளிகா வீதியூடாக கடற்கரை வீதியை அடைந்து சாய்ந்தமருதின் உள் வீதிகளில் பவனிவந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைமையிலான அமைப்பின் சார்பா சுயேட்சைக் குழுவினர் தமது வேட்பு மனுவை ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் வை.எம். ஹனிபா தலைமையில் அம்பாறை மாவட்ட கச்சேரியில்  தாக்கல் செய்ததன் பின்னர் வாகன பவனியாக சாய்ந்தமருதை நோக்கி வருகை தந்தபோது மாளிகைக்காடு சந்தியில் இடைமறித்த பொலிஸார், பிரதான வீதியூடாக ஊர்வலம் செல்வதைத் தடுத்தனர்.
பின்னர்  சுயேட்சைக் குழுவினரின் வாகன ஊர்வலம் மாளிகா வீதியூடாக கடற்கரை வீதியை அடைந்து சாய்ந்தமருதின் உள் வீதிகளால் சென்றதாக அறிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபைக்கு 40 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஒன்பது அரசியல் கட்சிகளும் ஆறு சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
கல்முனை மாநகர சபைப் பிரிவு ஒரு இரட்டை தொகுதி அடங்களாக 23 வட்டாரங்களைக் கொண்டது. இச்சபைக்கு  40 உறுப்பினர்களை தெரிவு செய்யப்படவேண்டியுள்ளது.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு பள்ளிவாசல் தலைமையிலான அமைப்பினர்  சார்பாக கல்முனை மாநகரசபைக்கு போட்டியிடும் சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு தோடப்பழச் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று இந்த அமைப்பினரின் சார்பாக காரைதீவு பிரதேச சபைக்கு போட்டியிடும் மாளிகைக்காடு சுயேட்சைக் குழுவுக்கும் தோடப்பழச் சின்னம் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top