தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்
நாளாந்தம் பெறப்படும் வருமானம்
3 கோடி ரூபாவுக்கும் அதிகம்
தெற்கு
அதிவேக நெடுஞ்சாலையில்
பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
தெற்கு
அதிவேக நெடுஞ்சாலைவீதி
நடவடிக்கை மற்றும்
முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க இதுதொடர்பாக
தகவல் தருகையில்
பாடசாலை விடுமுறை
மற்றும் புத்தாண்டு
காலத்தை முன்னிட்டு
அதிவேக நெடுஞ்சாலையைப்
பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாளாந்தம்
பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 1 இலட்சத்திற்கும் அதிகமாகும்
என்று தெரிவித்துள்ளார்.
நாளாந்தம்
பெறப்படும் வருமானம் 3 கோடி ரூபாவுக்கும் அதிகம்
என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
வாகன
நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான
விசேட வேலைத்திட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொதுமக்கள்
ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்
கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment