1400 பக்க அறிக்கையை ஆராய்ந்த பின்னரே
நடவடிக்கை குறித்த முடிவு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்
கையளிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி
பிணை முறி
மோசடி குறித்த
விசாரணை அறிக்கை
தொடர்பாக என்ன
நடவடிக்கை எடுப்பது
என்பது குறித்து
முடிவெடுப்பதற்கு முன்னர், ஜனாதிபதி செயலக அதிகாரிகள்
அதனை முழுமையாக
ஆராயவுள்ளனர்.
மத்திய
வங்கி பிணைமுறி
மோசடி தொடர்பாக
விசாரணை நடத்த
கடந்த ஜனவரி
மாதம் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்ட
உச்சநீதிமன்ற நீதியரசர் கே.ரி.சித்ரசிறி
தலைமையிலான- ஆணைக்குழு தமது அறிக்கையை நேற்று
பிற்பகல் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.
இது
தொடர்பாக தகவல்
வெளியிட்டுள்ள ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர்,
விசாரணை
அறிக்கை தொடர்பாக
என்ன நடவடிக்கை
எடுப்பது என்று
முடிவு செய்வதற்கு
முன்னர், அறிக்கையை
முழுமையாக ஜனாதிபதி
செயலக அதிகாரிகள்
ஆராயவுள்ளனர்.
இந்த
அறிக்கை விரிவான
ஒன்று. அதிகாரிகள்
இதனை ஆராய்வதற்கு
சற்று காலஅவகாசம்
தேவைப்படும்.
இந்த
அறிக்கை, சாட்சியங்கள்,
இணைப்புகள்,பரிந்துரைகளை உள்ளடக்கியதாக
அமைந்துள்ளது. 100 இணைப்புகளுடன் இந்த
அறிக்கை மொத்தம்
1400 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 70 சாட்சிகளின்
சாட்சியங்களையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment