க.பொ.த
உயர்தர பரீட்சை விடைத்தாள் மீளாய்விற்கு
விண்ணப்பிக்கும்
காலஎல்லை ஜனவரி 15
இன்று வெளியாகிய கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை
விடைதாள்கள் மீளாய்வு செய்வதற்காக அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை ஏற்றுகொள்ளப்படும் என்று
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான மீளாய்வு விண்ணப்ப பத்திர
பெறுபேறு ஆவணத்துடன் பாடசாலை அதிபருக்கு அனுப்படும்.
தனியார் விண்ணப்பதாரர்கள் பரீட்சை திணைக்களத்தினால்
வெளியிடப்படவுள்ள தேசிய பத்திரிகை மூலமாக இடம் பெறும் விளம்பரத்திற்கு அமைவான
விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்தி அனுப்பவேண்டும்.
இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோக பூர்வ
இணையத்தளத்திலும் இது தொடர்பில் வெளியிடப்படும்.
பரீட்சை பெறுபேறு தொடர்பான விபரங்களை அறிந்து
கொள்ளவேண்டுமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் கேட்டறிந்துகொள்ளமுடியும்.
பாடசாலை பரீட்சை ஏற்பாடு மற்றும் பெறுபேறு கிளை 0112784208/
0112784537/ 0113188350/ 0113140314.
அவசர தொலைபேசி இலக்கம் 1911
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.