இராஜாங்க
அமைச்சராக
பியசேன
கமகே இன்று சத்தியப்பிரமாணம்
சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க
அமைச்சராக பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பியசேன கமகே இன்று (28)
முற்பகல் ஜனாதிபதியின்
உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
உச்ச
நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட, மேன்முறையீட்டு
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய இரட்டை பிரஜா உரிமை
காரணமாக தனது
பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்த கீதா குமாரசிங்கவின்
இடத்திற்கு கடந்த நவம்பர் 10 ஆம் திகதி
சபாநாயகர் கரு
ஜயசூரிய முன்னிலையில்
பியசேன கமகே,
சத்தியப்பிரமாணம் செய்தார்.
கடந்த
2015 ஆம் ஆண்டு
ஓகஸ்ட் மாதம்
17 ஆம் திகதி
இடம்பெற்ற பொதுத்
தேர்தலில், காலி மாவட்டத்தில் போட்டியிட்ட பியசேன
கமகே,
45,245 விருப்பு வாக்குகளை பெற்று
7 ஆவது இடத்தை
பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலி
மாவட்டத்தில்
ஐ.ம.சு.மு. சார்பில் 6 பாராளுமன்ற
உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.