நாட்டரிசிக்கு சில்லறை உச்ச விலை

வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது


நாட்டரிசிக்கான சில்லறை உச்சவிலை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி ஒரு கிலோவிற்கான சில்லறை விற்பனை விலை 74 ரூபா என்று பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஹசித திலகரத்னவினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது 26 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர் , ஏற்றுமதியாளர் , விநியோகத்தர்கள் ,வர்த்தகர்கள் நாட்டரிசியினை ஆகக்கூடிய சில்லறை விலைக்கு மேலாக விற்பனை செய்யவோ விற்பனைக்கு வைத்திருப்பதோ அல்லது விற்பனைக்கு காட்சிப்படுத்தல் முடியாதென்று அதில் சுட்டிக்காட்டப்படுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top