இவள் என்னுடைய மகளா?
என
கேட்டு அதிர்ந்து போன தாய்!
எல்லோரையும் போன்றே குழந்தை பிறந்ததும் பார்க்க ஆவலாக
இருந்த சோபியா பிளேக், அதிர்ச்சியில்
உறைந்து போனார்.
காரணம் அவரை போன்று குழந்தை Tiara கருப்பாக இல்லாமல், வெள்ளை நிறத்துடன் நீல நிற கண்ணுடன்
இருந்ததாம்.
Tiara-யின் தந்தையான கிறிஸ்டோபரும் வெள்ளை
நிறத்தோற்றம் கொண்டவர், 60 வயதான கிறிஸ்டோபர் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மில்லியன் பிறப்புகளில் இவ்வாறான அபூர்வம் நிகழும் என
குறிப்பிட்ட மருத்துவர்கள் கூறிய பின்னரே சோபியா, மனநிம்மதி அடைந்தார்.
அவர் கூறுகையில், ஜமைக்காவில் என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரையில் கருப்பு
நிறமே அதிகம் ஆக்கிரமித்திருக்கும், குறைந்தது என் பிள்ளை கணவர் மற்றும் என்னுடைய நிறத்தை
கலந்து பிரதிபலிக்கும் என நினைத்திருந்தேன், ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
அவள் குழந்தையாக இருந்தபோது கூட எதுவும் தெரியவில்லை,
வளர வளர இருவரும்
சந்திக்கும் பிரச்சனைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தெருவில் நடந்து சென்றால் கூட Tiara என்னுடைய மகள் என்பதை யாரும் நம்ப
மறுக்கிறார்கள்.
குழந்தை பிறந்தவுடன் அவளை பார்த்து என்னுடைய மகளா? என கேட்டு அதிர்ந்து போனேன்.
இதற்கு முன்னரும் வெள்ளை நிறத்துடைய குழந்தைகள், கருப்பு நிறம் கொண்ட தாய்களுக்கு பிறந்ததை
பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் கண் மற்றும் முடியும் நிறம் மாறி இருக்கும் என
தெரியாது, Tiara என்னுடைய மகள் என
சொல்லிச்சொல்லியே சோர்ந்து போய்விட்டேன்.
சில நேரங்களில் மருத்துவர்கள், ஆசிரியர்கள் கூட நம்ப மறுக்கிறார்கள், உண்மை தெரிந்த பின்னர் பலரும் என்னிடம்
மன்னிப்பு கேட்கும் நிகழ்வு கூட நடந்திருக்கிறது.
எது எப்படி இருந்தாலும், என்னுடைய மகள் அழகானவள், அவளை நினைத்து ஒரு தாயாக பெருமையடைகிறேன் என
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment