முதல் கூட்டத்தை சாய்ந்தமருதில் நடத்த முயற்சி!
அமைதிப் பூமியாக இருக்கும் சாய்ந்தமருதை
கலவர பூமியாக மாற்ற
மு.கா.கட்சி கங்கனம் கட்டி செயல்படுகின்றதா?
மக்கள் கேள்வி
கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்கான. மு.கா. முதல் கூட்டத்தை சாய்ந்தமருதில் நடத்த முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகிக்
கொண்டிருக்கின்றன. இது உண்மையாக இருக்குமேயானால் அமைதிப் பூமியாக இருக்கும் சாய்ந்தமருதை கலவர பூமியாக மாற்ற
மு.கா.கட்சி கங்கனம் கட்டி அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றதா? என சமாதானத்தையும் அமைதியையும் விரும்பும்
சாந்தமான மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
சாய்ந்தமருது மக்கள் தமது நியாயமான கோரிக்கையான தனியான உள்ளூரட்சி மன்றக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கு தங்களது போராட்டத்தின் இன்னுமொரு வடிவமாக, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆதரிக்காத நிலையில் சுயேட்சை குழுவொன்றை களமிறக்கியுள்ளனர். இவர்களின் இந்த முடிவு மிகவும் நியாயமானதும், அவசியமானதும் என்பதை நியாயமாகச் சிந்திப்பவர்கள் மறுக்கமுடியாது என பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையிலும்.
சாய்ந்தமருது மக்கள் மூன்று நாட்களாக தமது வர்த்தக நிலையங்களை மூடி குறிப்பாக இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராடிய போது, அது தொடர்பில் கவனம் செலுத்தாத மு.கா மக்கள் பிரதிநிதிகள், தற்போது சாய்ந்தமருது மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக தமது கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி சாய்ந்தமருது மக்களிடம் வாக்குக் கேட்பதற்காக அந்த
மக்களின் நிலமைகளை புரிந்திருந்தும் நீங்களா? நாங்களா? ஒரு கை பார்த்துவிடுவோம் என்ற
பாணியில் கட்சி நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது சாய்ந்தமருது பிரதேசத்தில் இங்குள்ள
இளைஞர்களுடன் மோதி அழிவுகளை ஏற்படுத்தும் முயற்சியாகவே இங்குள்ள மக்களால் நோக்கப்படுகின்றது.
கட்சியின் தலைவரான ஹக்கீமுக்கும் மு.கா கட்சியின் வளர்ச்சிக்கும் மிகப் பங்களிப்புச் செய்த சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பிலான போராட்டங்களுக்கு மு. கா. ஒரு அங்கமாகவே இம்மக்களுடன் இணைந்து செயற்பட்டிருக்க வேண்டும்.
குறைந்தது சாய்ந்தமருதில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் நேரடி அரசியல் செயற்பாடுகளை விட்டும் விலகியிருந்து இம்மக்களின் கோரிக்கை நிறைவேற உதவியிருக்க வேண்டும். அதைவிடுத்து இந்த மக்களின் விருப்பதை நிறைவேற்றாத இவர்கள் இம்மக்களிடம் வாக்கு கேட்பதற்கு நீயா? நானா? என்று போராட்டம் நடத்த முன்வந்திருப்பது சாய்ந்தமருதில்
அழிவைக்கொண்டுவரும் ஒரு முயற்சியாகும் எனவும்
இவர்களின் நடவடிக்கைகள் குறித்து நோக்குனர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..
மு.கா. முதல் கூட்டத்தை சாய்ந்தமருதில்தான் நடத்திக் காட்டுவது
என்பது குறித்து சிந்திப்பார்களேயானால் அவர்களின் அந்த சிந்தனை சாய்ந்தமருதில் எத்தனை
உயிர்களைப் பலி கொடுத்தாவது சாய்ந்தமருதில் சரிந்து போயுள்ள கட்சியை நிமிர்த்திவிடல்
வேண்டும் என்றுதான் சிந்திக்கின்றார்களே தவிர
முஸ்லிம் சமூகத்திலுள்ள மக்களின் உரிமை, கோரிக்கை, விருப்பம் பற்றி சிந்திக்கவில்லை
என்றே கருத வேண்டியிருப்பதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
அமைதிப் பூமியாக இருக்கும் சாய்ந்தமருதை
கலவர பூமியாக மாற்ற வேண்டாம்
0 comments:
Post a Comment