இலங்கையை 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி
வங்காள தேசம் புதிய சாதனை
ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில்
இது 6-வது மிகப்பெரிய வெற்றியாகும்
ஆசியக்
கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதலாவது ஆட்டத்தில் இலங்கையை 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி
வங்காள தேசம்
புதிய சாதனைப்
படைத்துள்ளது.
இந்தியா,
பாகிஸ்தான் உட்பட ஆறு அணிகள் பங்கேற்கும்
ஆசியக் கிண்ண
கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதலாவது போட்டி ஐக்கிய அரபு
எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது.
இலங்கைக்கு
எதிரான முதல்
ஆட்டத்தில் வங்காள தேசம் 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார
வெற்றி பெற்றது.
இதன் மூலம்
அந்த அணி
புதிய சாதனை
படைத்தது. வெளிநாட்டில்
அந்த அணி
மிகப்பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்று இந்த
சாதனையை புரிந்துள்ளது.
இதற்கு
முன்பு புலவாயோ
(ஜிம்பாப்வே) மைதானத்தில் 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்று
இருந்ததே சாதனையாக
இருந்தது. இதை
வங்காளதேசம் நேற்று துபாய் மைதானத்தில் முறியடித்தது.
வங்காளதேசம்
ஒருநாள் கிரிக்கெட்
போட்டி வரலாற்றில்
இது 6-வது
மிகப்பெரிய வெற்றியாகும். அந்த அணி கடந்த
ஜனவரி மாதம்
டாக்காவில் இலங்கையை 163 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதே சிறந்த
வெற்றியாகும்.
0 comments:
Post a Comment