மட்டக்களப்பு பொதுநூலக கட்டட
நிர்மாணப் பணிகளைப்
பூர்த்தி செய்வதற்கு169.97
மில்லியன் ரூபா நிதி
பிரதமர் சமர்ப்பித்த ஆவணத்துக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
மட்டக்களப்பில்
செயற்பட்டுவரும் 50 வருடம் பழைமை
வாய்ந்த பொதுநூலக
கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் ஒன்றுக்கான
நிர்மாணப் பணிகள்
தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
இந்தக்
கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு
மேலும் தேவைப்படும்
169.97 மில்லியன் ரூபா நிதி 2019 ஆம் ஆண்டின்
வரவு செலவு
திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக
தேசிய கொள்கை
மற்றும் பொருளாதார
அலுவல்கள் அமைச்சர்
என்ற ரீதியில்
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment