முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு
பிரான்ஸ் நாட்டில் கிடைத்த அதியுயர் விருது
பிரான்ஸ் நாட்டின் அதியுயர் கௌரவ விருது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அரசாங்கம் வழங்கும் அதி உயர் விருதான 'கொமான்தியர் டி லா லிஜியோன் தொனர்' எனும் விருதினால் சந்திரிக்கா குமாரதுங்க கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோன் சார்பில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் மரன் சூ வின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தின்போது இந்தக் கௌரவம் சந்திரிக்காவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விருதைப் பெற்றுள்ள முதலாவது மற்றும் ஒரே இலங்கையர் என்ற பெருமையையும் சந்திரிக்கா பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருதை பெற்றுக்கொண்டமைக்காக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியில் எத்தகைய வேறுபாடு காணப்பட்டாலும் வாழ்த்து தெரிவிப்பதாக, நாமல் ராஜபக்ஸ தனது ரிவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment