ஹிருணிக்கா எம்.பி வீட்டிற்குள் புகுந்த திருடர்கள்!
நாடாளுமன்ற
உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின்
வீட்டிற்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான தங்க
நகைகளை கொள்யைடித்து
சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரலங்கல
வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் 5 லட்சம் ரூபாவுக்கு
அதிக பெறுமதியான
தங்க நகைகள்
மற்றும் கைக்கடிகாரங்கள்
போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
24 மணித்தியால
பொலிஸ் பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் திருடர்கள்
புகுந்து திருடியுள்ளனர்.
இது குறித்து
ஹிருணிக்காவின் கணவர் நேற்று அத்துருகிரிய பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம்
இடம்பெற்ற தினத்தன்று
இரவு வீட்டின்
மதில் மீது
நடந்து வந்த
திருடன், வீட்டின்
மேல் மாடியில்
உள்ள ஜன்னல்
ஊடாக வீட்டிற்குள்
நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜன்னல்
வழியாக அறை
ஒன்றுக்குள் நுழைந்த திருடன் அங்கிருந்த அலுமாரியின்
கதவினை திறந்து
நகை மற்றும்
பொருட்களை திருடியுள்ளான்.
நகைகள்
வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் மாத்திரம்
வீட்டிற்கு அருகில் இருந்த காணி ஒன்றில்
பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த
சம்பவம் இடம்பெற்ற
தினத்தன்று ஹிருணிக்கா மற்றும் கணவர் வீட்டில்
இருந்துள்ளனர். நேற்று காலை எழுந்து பார்க்கும்
போது பொருட்கள்
காணாமல் போயுள்ள
விடயம் தெரியவந்துள்ளது.
சம்பவம்
தொடர்பில் இதுவரை
சந்தேக நபர்கள்
கைது செய்யப்படாத
நிலையில் பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.