மாகாண சுகாதார அமைச்சின்
வாகனங்களின் அவலநிலை
மாகாண ஆளுநரே அமைச்சின் அதிகாரிகளே!
இது உங்களின் மேலான கவனத்திற்கு
இது மாகாண சுகாதார அமைச்சின் வாகன தரிப்பிடம்
என்றோ இல்லை மத்திய சுகாதார அமைச்சின் வாகன தரிப்பிடமோ என்று நினைத்துவிட்டீர்களா?
அப்படி நீங்கள் நினைத்தால் அது தவறு. இது ஒரு பிரதேச வைத்தியசாலையில்
கடும் வெயிலிலும் மழையிலும் யாரும் கவனிப்பாரற்று நிறுத்தப்பட்டிருக்கும் சுகாதார திணைக்களத்தின்
வாகனங்களாகும்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில்தான் இந்த வாகனங்கள் அனைத்தும் யாரும் கவனிப்பாரற்று நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கிறன.
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்குரிய அம்பியுலன்ஸ்,
கோமாரி மத்திய மருந்தகத்தின் அம்பியுலன்ஸ்,
பொத்துவில் பிரதேசத்தில் சுகாதார ந்லன் குறித்து திட்டமிடும் பொத்துவில் சுகாதார
வைத்திய அதிகாரியின் வாகனம், சுகாதார
அமைச்சுக்குரிய வாகனம், கல்முனை (DPDHS) பிரிவுக்கு சொந்தமான வாகனம் என்பன இவ்வாறு கடும் வெயிலிலும் மழையிலும் யாரும் கவனிப்பாரற்று நிறுத்தப்பட்டிருக்கின்றன.
சாய்ந்தமருது வைத்தியசாலை இப்பிரதேச வைத்தியசாலைகளின் கழிக்கப்பட்ட
பொருட்களையும் வாகனங்களையும் தேக்கி வைக்கப்படும் இடமாகவும் ஸ்டோராகவும் பயன்படுத்தப்பட்டதா?
அப்படியான எண்ணத்தில்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்பட்டிருக்கின்றார்களா என இப்பிரதேச
மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
மத்திய சுகாதார அமைச்சரே, கிழக்கு மாகாண ஆளுநரே, மாகாண சுகாதார
அமைச்சின் அதிகாரிகளே இது உங்களின் மேலான கவனத்திற்கு.
0 comments:
Post a Comment