சீனாவில் பிச்சைக்காரர்களுக்கு
அதிக லாபம் கொடுக்கும்
டிஜிட்டல் பரிவர்த்தனை
   

சீனாவில் பிச்சைக்காரர்கள், பணம் இல்லை என்று சொல்பவர்களிடம் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் யாசகம் பெற்று அதிக லாபம் பெறுகிறார்களாம்.
உலகம் பணமில்லா பரிவர்த்தனையான, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. அதனால் கையில் பணமில்லை என்று சொல்லி விடுவதால் யாசகம் கேட்பவர்களின் நிலைமை மோசமாகி விட்டதாம்.
இந்த நிலையை சரிசெய்ய முடிவு செய்த சீன யாசகர்கள் தீர்வைக் கண்டுபிடித்துவிட்டனர். ஷான்டோங் மாகாணத்தில் உள்ள ஜினான் நகரில் இருக்கும் யாசகர்கள், தங்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற்றிக்கொண்டனர்.
வழக்கமாக கையில் பாத்திரமும், பையில் பழைய அழுக்கு துணிகளுமாக இருக்கும் பிச்சைக்காரர்கள், தற்போது கையில் பாத்திரமும், பையில் துணிக்கு பதிலாக பிரிண்ட் செய்யப்பட்ட கியூ.ஆர்.கோட், கடன் அட்டைகளைத் தேய்ப்பதற்கான இயந்திரம் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். பணம் இருப்பவர்களிடம் பணமாகவும், இல்லாதவர்களிடம் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்யும்படியும் சொல்கிறார்களாம்.
சீனாவின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், பெய்ஜிங் உட்பட பல நகரங்களில் கியூ.ஆர்.கோட் மூலம் யாசகர்கள் அதிக அளவில் வருமானம் பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் யாசகத்தை எல்லா இடங்களிலும் செய்துவிட முடியாது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில்தான் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என கணக்கும் அவர்களுக்கு உள்ளதாம்.
இதுபோன்ற இடங்களில் ஒரு யாசகர் மாதத்துக்கு சுமார் 44 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து விடுகிறாராம். டிஜிட்டல் பரிவர்த்தனையில், அமெரிக்காவை விட 50 மடங்கு அதிகமாக சீனா ஈடுபட்டுவருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top