சாய்ந்தமருது
பொது நூலகக் கட்டடத்தின் அவல நிலை
மேயரும்
ஆணையாளரும் நடவடிக்கை
எடுக்க வேண்டும்
பிரதேச மக்கள்
வேண்டுகோள்
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பொது நூலகக் கட்டடத்தின் அவல நிலை
குறித்து பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர்.. மன்சூர் அவர்களின் முயற்சியால்
நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்ட இப்பொது நூலகம் சுமார் 38 வருடகாலம் பழமை
வாய்ந்த கட்டடமாகும். இக்கட்டடத்தில் சில இடங்களில் மேல் தட்டிலுள்ள கொங்கிறீட் விழுந்து கொங்கிறீட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள
கம்பிகள் வெளியில் வந்து அபாயகரமான நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறான பழமைவாய்ந்த
கட்டிடம் இதுவரை புனர் நிர்மாணம்
செய்யப்பட்டு தற்காலத்திற்கு ஏற்ப அழகுபடுத்தப்படவில்லை.
சுனாமி பேரலைத் தாக்கத்தின் பின்னர் கடற்கரை வீதியிலிருந்து முற்றாக சேதமடைந்த
சாய்ந்தமருது வைத்தியசாலை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் என்பன சில காலங்களாக
இந்த நூலகக் கட்டிடத்தில்தான் தற்காலிகமாக இயங்கி வந்தது.
பின்னர் அவை சொந்தக் கட்டடங்களுக்கு மாற்றப்படட நிலையில், நூலகக் கட்டிடத்தை குறைந்தது அழகுபடுத்தும் முயற்சி கூட
உரியவர்களால் எடுக்கப்படவில்லை எனப் பிரதேச மக்களால்
குற்றம் சாட்டப்படுகின்றது.
சாய்ந்தமருது பொது நூலகக் கட்டடமும் அதன் பெயர் பலகையும் தற்கால
நாகரிகத்திற்கு ஏற்றால் போல் அழகுபடுத்தப்படாமல் மன்னர் ஆட்சி காலத்தில்
கட்டப்பட்ட கட்டடமும் அக்காலத்தில் நடப்பட்ட பெயர் பலகை போன்றும் காட்சியளிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.. மன்சூர் அவர்கள் கல்முனை தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு
செய்யப்பட்டதும் பிரதேச மக்களின் அறிவை விருத்தி செய்வதற்கு அன்னார் பொது நூலகங்களை தொகுதியிலுள்ள ஒவ்வொரு
ஊரிலும் உருவாக்கி அவைகளின் அபிவிருத்திக்கு முதன்மை வழங்கினார். ஆனால், இன்றைய
அரசியல்வாதிகள் பொது நூலகங்களின் அபிவிருத்திக்கு முதன்மை வழங்கும் நிலை இல்லாத்து
குறித்து கல்வியலாளர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
கல்முனை மாநகர சபையின் தற்போதய சட்டத்தரணியான மேயரும் சிறந்த நிர்வாகியான
ஆணையாளரும் சாய்ந்தமருது பொது நூலகக் கட்ட்டத்தையும் அதன் எல்லைகளையும்
அழகுபடுத்தி கவர்ச்சியான பெயர் பலகையும் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
-
மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.