ஆப்கானிஸ்தான் வெற்றி;
ஆசிய கிண்ண சுற்றுத்தொடரில் இருந்து
வெளியேறும் இலங்கை அணி
அபுதாபியில்
நடைபெறும் ஆசியக்
கிண்ணக் கிரிக்கெட்
போட்டியில் குரூப் பி ஆட்டத்தில் முதலில்
வங்கதேசத்திடமும் பிறகு நேற்று ஆப்கானிஸ்தானிடமும் தோற்று இலங்கை அணி அதிர்ச்சி
வெளியேற்றம் கண்டது.
இரு
அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று அபுதாபியில்
இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி
50 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை
எடுத்தது. இலங்கை
அணி 42ஆவது
ஓவரில் பத்தாவது
விக்கட்டை இழந்து
158 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதன் பிரகாரம்,
ஆப்கான் அணி
91 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தானின்
சார்பில் ரஹ்மத்
ஷா 72 ஓட்டங்களைப்
பெற்றிருந்தார். பந்துவீச்சில் திசர பெரேரா ஆகக்கூடுதலாக
ஐந்து விக்கட்டுக்களைக்
கைப்பற்றினார்.
ஆப்கானிஸ்தான்
அணி சார்பில்,
ரஹ்மத் ஷாஹ்
72 ஓட்டங்களையும், இஹ்சானுல்லாஹ் 45 ஓட்டங்களையும், ஹஸ்மதுல்லாஹ்
ஷஹீதி 37 ஓட்டங்களையும்,
மொஹம்மட் ஷஷாட்
ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் திசர
பெரேரா 5 விக்கெட்டுகளை
கைப்பற்றினார்.
பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி
வீரர்கள் ஆப்கானிஸ்தான்
அணி வீரர்களின்
பந்துவீச்சிற்கு முகம்கொடுக்க முடியாமல் தடுமாறினர்.
ஆரம்ப
துடுப்பாட்ட வீரரான, குசல் மெண்டிஸ் எவ்வித
ஓட்டங்களையும் பெறாது ஆட்டமிழந்தார். இத்தொடரில் பங்களாதேஷ்
அணியுடனான போட்டியிலும்
அவர் எவ்வித
ஓட்டங்களையும் பெறாது ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த
வகையில் ஆப்கானிஸ்தான்
அணியின் பந்துவீச்சிற்கு
முகம் கொடுக்க
முடியாத நிலையில்,
சிறந்த ஆரம்பத்தை
வழங்க முடியாத
நிலைக்கு இலங்கை
அணி வீரர்கள்
தள்ளப்பட்டு, குறைந்த ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.
இலங்கை
அணி சார்பில்
உபுல் தரங்க
36 ஓட்டங்களையும், திசர பெரேரா
28 ஓட்டங்களையும், தனஞ்சய டி
சில்வா 23 ஓட்டங்களையும்,
அஞ்சலோ மெத்திவ்ஸ்
22 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்து ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில்
ஆப்கானிஸ்தான் அணி சார்பில், ரஷீத் கான்,
குல்பதின் நைப்,
மொஹம்மட் நபி,
முஜிபுர் ரஹ்மான்
ஆகியோர் தலா
2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இலங்கை
அணி 41.2 ஓவர்களில்
சகல விக்கெட்டுகளையும்
இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அந்த
வகையில், ஆப்கானிஸ்தான்
அணி 91 ஓட்டங்களால்
இலங்கை அணியை
வெற்றி கொண்டு
அடுத்த சுற்றுக்கு
முன்னேறியதோடு, B பிரிவிலுள்ள இரு அணிகளுடனும் தோல்வியுற்ற
இலங்கை அணி,
இத்தொடரிலிருந்து அடுத்த சுற்றில் விளையாடுவதற்கான தகுதியை
இழந்து தொடரிலிருந்து
வெளியேறியுள்ளது.
இது
வரை இடம்பெற்ற
ஆசிய கிண்ணங்களில்
இலங்கை அணி,
இந்தியா மற்றும்
பாகிஸ்தான் அணிகளுடன் போட்டியிடாது வெளியேறும் சந்தர்ப்பம்
இதுவென்பதோடு, இத்தொடரில் இந்திய அணி எவ்வித
போட்டிகளுக்கும் முகம் கொடுக்காத நிலையில், இலங்கை
அணி இத்தொடரிலிருந்து
வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன்,
ஆப்கானிஸ்தான் அணி, ஒரு நாள் போட்டியொன்றில்
இலங்கை அணியை
வெற்றி கொண்டது
இதுவே முதல்
தடவையாகும்.
0 comments:
Post a Comment