இன்று காலை கைது செய்யப்பட்ட
கருணாஸ் புழல் சிறையிலிருந்து
வேலூர் சிறைக்கு மாற்றப்படுகிறார்
சர்ச்சை,
மிரட்டல், அவதூறு
பேச்சு பேசியதாகக்
கைது செய்யப்பட்ட
நடிகரும், சட்டமன்ற
உறுப்பினருமான கருணாஸ் வேலூர் மத்திய சிறைக்கு
மாற்றப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருவாடனை
தொகுதி எம்.எல்.ஏ.வான கருணாஸ்
முதல்வர், காவல்துறையை
அவதூறாகவும் மிரட்டும் விதமாகவும் பேசியதாக இன்று
காலை கைது
செய்யப்பட்டார்.
பிறகு
அவர் நுங்கம்பாக்கம்
காவல்நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டு
3 மணி நேரத்துக்கு
மேலாக விசாரிக்கப்பட்டார்.
பிறகு எழும்பூர்
13ஆவது நீதிமன்ற
நீதிபதி கோபிநாத்
வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருடன் கைதாகிய
செல்வநாயகம், கார்த்திக், நெடுமாறன் ஆகிய கட்சி
நிர்வாகிகளும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து
கருணாஸ் மீதான
வழக்கை விசாரித்த
நீதிபதி கொலை
முயற்சி பிரிவை
(307) ரத்து செய்தார். மேலும் கருணாஸ் மற்றும்
முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த நிர்வாகி செல்வநாயகம்
ஆகியோரை அக்டோபர்
5-ஆம் திகதி
வரை நீதிமன்ற
காவலில் வைக்க
உத்தரவிட்டார். இதனிடையே எம்.எல்.ஏ. கருணாஸ் தரப்பில்
நாளை காலை
10 மணிக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுவதாக
தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து எம்.எல்.ஏ. கருணாஸ்
புழல் சிறையில்
அடைக்கப்பட்டார்.
இந்த
நிலையில், கைது
செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ்
புழல் சிறையில்
இருந்து வேலூர்
மத்திய சிறைக்கு
மாற்றப்படுகிறார்.
0 comments:
Post a Comment