அபிவிருத்தி விடயங்களில்
அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசங்களில்
அக்கறை காட்டாத நல்லாட்சி அரசாங்கம்
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கு
ஜனாதிபதி செயலகம்
500 கோடி ரூபா ஒதுக்கீடு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும்
நல்லாட்சி என்று கூறப்படும் இந்த ஆட்சியில் அம்பாறை மாவட்டத்தின்
கரையோரப் பிரதேசங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த அபிவிருத்தி வேலைத்
திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என இப்பிரதேச மக்கள் கவலை
வெளியிடுகின்றனர்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பிரதேச அபிவிருத்தி
என்ற ரீதியில் ஆட்சி அமைக்கப்பட்டு இதுவரை
அம்பாறை மாவட்டக் கரையோரப்
பிரதேசங்களுக்கு ஒருமுறைதானும் விஜயம் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது..
தமிழ் மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்டங்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்
அடிக்கடி விஜயம் செய்து அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதுடன் திறந்தும்
வைக்கிறார்கள்.
இந்நிலையில், கல்முனை, சமாந்துறை, நிந்தவூர், அட்டாளைசேனை, ஒலுவில்,,அக்கரைப்பற்று,
பொத்துவில், இறக்காமம், மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் எந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களும்
நடைமுறைப்படுத்தப்படுவதாக இல்லை.
இப்பிரதேச மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இப்பிரதேசங்களைச்
சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் நீண்ட காலமாக கிடைக்கப்
பெறவில்லை. இதனால், இப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதில் புறக்கனிக்கப்படுவருகின்றதா?
என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நேற்று 20 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு உரையாற்றுகையில்,
திருகோணமலை
மாவட்டத்திற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் நீண்ட
காலமாக கிடைக்கப்
பெறவில்லை.
அதனால்
மாவட்ட மக்களுக்கான
அபிவிருத்தி செயற்பாடுகள் மக்களுக்கு போதுமானதாக காணப்படவில்லை.
அதனால்
தான் இவ்
வேலைத் திட்டத்தை
ஜனாதிபதி செயலகம்
மூலம் நடை
முறைப்படுத்துவதாகவும், இதற்காக 500 கோடி
ரூபா ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் நீண்ட காலமாக கிடைக்கப் பெறவில்லை. என்பது போல் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களின்
அபிவிருத்திக்கும் இப்பிரதேசங்களைச் சேர்ந்த ஒருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நீண்ட காலமாக கிடைக்கப் பெறவில்லை.
இப்படியான நிலையில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் முஸ்லிம்கள்
செறிந்து வாழும் பகுதிகளில் இந்த நல்லாட்சியில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்
நடைமுறைப்படுப்படாமல் இருப்பது ஏன்?
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை முஸ்லிம் கட்சிகளின் மூலம் மொத்தமாக
தேர்தல் காலங்களில் பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலுள்ளவர்கள் இருந்து கொண்டு இப்பிரதேச மக்களுக்கான அபிவிருத்தி
திட்டங்கள் குறித்து சிந்திக்காதவர்களாகவும் எதுவித கவலையும் இல்லாதவர்களாகவும்
இருந்து கொண்டிருக்கிறார்களா? என இப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment