மக்கள் வங்கியின் கல்முனைக் கிளைக் கட்டடம்

நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்படுவதில் தாமதம்

வங்கிகளின் நிருவாகத்திற்குப் பொறுப்பான
பிரதி அமைச்சர் ஹரீஸ்
கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன்?
மக்கள் கேள்வி


மக்கள் வங்கியின் கல்முனைக் கிளைக் கட்டடம் நவீன வசதிகளுடன் நிர்மாணிப்பதற்காக தற்போது தனியார் கட்டடத்திற்கு இக்கிளை இடமாற்றம் செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரையும் கட்டட நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை நாடாளுமன்ற உறுப்பினராக மர்ஹும் எம்.ஸி.அஹமது பதவி வகித்த காலத்தில் ஒரு சாதாரண எம்.பியாக அன்னார் இருந்தும் அந்த நேரத்தில் இதற்கான அமைச்சரோடும், வங்கி நிர்வாகத்தோடும் கலந்துரையாடி கல்முனையில் ஒரு நவீன கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு 23 ஆவது கிளையாகத் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
ஆனால், இன்று கல்முனைப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. இவர் ஒரு பிரதி அமைச்சர். அது மாத்திரமல்ல வங்கிகளுக்கு பொறுப்பான அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் இவருக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது. 08 அரச வங்கிகள் மற்றும் அவற்றின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற கம்பனிகளின் நிருவாக மற்றும் நிதி நடவடிக்கைகளுக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் அங்கீகாரம் வழங்குவது இந்த அமைச்சின் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.
இப்படியான நிலையில் பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களின் பிரதேசமான கல்முனை நகரில் மக்கள் வங்கியின் 23 வது கிளையின் புதிய கட்டடம் அதன் சொந்த நிலத்தில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்படுவதில் தாமதமாகிக் கிடப்பது ஏன்? பிரதி அமைச்சர் இது விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன்? கட்டட நிர்மாண வேலைகளை பிரதி அமைச்சரால் துரிதப்படுத்த முடியாதா? என இப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top