சமையல் எரிவாயு விலை ரூ.195ஆல் அதிகரிப்பு
பால் மா ரூ. 25 ஆல் குறைப்பு
சமையல்
எரிவாயுவை 195 ரூபா வால் அதிகரிக்க வாழ்க்கைச்
செலவு குழு
நேற்று தீர்மானித்துள்ளது.
இதன்படி,
12.5 கிலோ காஸ்
சிலிண்டர் 195 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, அதிகரிக்கப்பட்ட
கோதுமை மாவின்
விலையை ஐந்து
ரூபாவால் குறைக்க
இக்குழு பரிந்துரை
செய்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில்
நேற்று நடைபெற்ற
அமைச்சரவைக் கூட்டத்தின்போது இவ்விடயம் தொடர்பாகவும் தீர்மானிக்கும்
பொறுப்பை வாழ்க்கைச்
செலவு குழுவிடம்
அமைச்சரவை ஒப்படைத்திருந்தது.
இதன்படி, வாழ்க்கைச்
செலவுக்குழு சமையல் எரிவாயுவை 195 ரூபாவால் அதிகரிக்க
பரிந்துரை செய்துள்ளது.
இதேவேளை
உலக சந்தையில்
சமையல் எரிவாயுவின்
விலை அதிகரித்துள்ளது.
டொலரின் பெறுமதி
அதிகரிப்பினால் ரூபாவின் மதிப்பு வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்
இவற்றை கவனத்தில்கொண்டு
சமையல் எரிவாயு
விலையை 323 ரூபாவால் அதிகரிக்க வேணடும் என
சமையல் எரிவாயு
நிறுவனங்கள் வாழ்க்கைச் செலவு குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
எனினும் வாழ்க்கைச்
செலவுக் குழு
அதனை ரூபா
195 இனால் அதிகரிப்பதற்கு
பரிந்துரை செய்துள்ளது.
இதேவேளை,
இறக்குமதி செய்யப்படும்
முழு ஆடைப்
பால் மாவின்
விலை கிலோ
ஒன்றுக்கு ரூபா
25 இனால் குறைக்கவும்
வாழ்க்கைச் செலவு குழு பரிந்துரை செய்துள்ளது.
குறித்த
விலை மாற்றங்கள்
தொடர்பிலான வர்த்தமானி இன்று (19) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment