சவூதி அரேபியாவில் முதல் முறை;
விமானத் துறையில் பெண்கள்
சவூதி அரேபியாவிலேயே முதல் முறையாக பெண்களை இணை விமானிகளாகவும், விமான ஊழியர்களாகவும் பணியில் அமர்த்த உள்ளது ரியாத்தைச் சேர்ந்த விமான நிறுவனம்.
ஃப்ளைனஸ் என்னும் விமான நிறுவனம் இந்தப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள அல் ஜசீரா செய்தி நிறுவனம், ''நாட்டின் மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சவூதிப் பெண்களுக்கு அதிகாரமளிக்க ஃப்ளைனஸ் நிறுவனம் விரும்புகிறது.
அந்நிறுவனத்தின் இணை விமானிகள் மற்றும் பணிப்பெண்களின் வேலைக்காக இதுவரை சுமார் 1000 சவூதிப் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் பொருத்தமானவர்கள் வேலைக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.
சவூதியில் விமானத்துறையில் வேலை பார்க்க பெண்களுக்குத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனினும் அத்தகைய வேலைகளில் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்களே அதிகம் ஈடுபட்டு வந்தனர். இந்நிலை இனி மெல்ல மாறும்'' என்று தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டு இருந்த தடையை ரத்து செய்து, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவூதி மன்னர் சல்மான் பின் அப்துலாஜிஸ் அல் சவுத் உத்தரவிட்டார். இந்த உத்தரவு அதிகாரபூர்வமாக கடந்த ஜூன் மாதம் அமுலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment