வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாவுக்கான
அத்தியாவசிய உணவுப் பொருட்கள்
வறட்சியால்
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை
வழங்குதவற்குத் தேவையான நிதி நாளை மறுதினம்
வழங்கப்படும் என்று இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளர்
திஸர குமார
தெரிவித்துள்ளார்.
இதன்
முதல் கட்டத்தின்
கீழ்இ தற்பொழுது
அனுராதபுரம் மாவட்ட செயலகத்திற்கு நிதியில் ஒரு
தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட
மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள்
ஊடாக நிவாரணத்தை
வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்
அவர் கூறியுள்ளார்.
சதொச
மற்றும் கூட்டுறவுச்
சங்கங்கள் மூலம்
இந்த உலர்
உணவுப் பொருட்கள்
விநியோகிக்கப்படும்
உலர்
உணவுப் பொருட்களை
விநியோகிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும்
21 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.
வறட்சியால்
பெரும் பாதிப்பிற்கு
உள்ளான மாவட்டங்கள்
தற்போது அடையாளம்
காணப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு
மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாவுக்கான அத்தியாவசிய உணவுப்
பொருட்களை வழங்குவதற்கு
நிதி வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment