நாளை நள்ளிரவு முதல் 4% பஸ் கட்டணம் அதிகரிப்பு
குறைந்தபட்ச கட்டணம் ரூபா 12 மாற்றமில்லை
நாளை
நள்ளிரவு முதல்
(21) பஸ் கட்டணங்களை
அதிகரிக்க அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
பஸ்
சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இன்று (19) இடம்பெற்ற
பேச்சுவார்த்தையை அடுத்து, 4% பஸ் கட்டண அதிகரிப்புக்கு
அனுமதி வழங்கியதாக,
போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர்,
நிமல் சிறிபால
டி சில்வா
தெரிவித்துள்ளார்.
ஆயினும்
குறைந்தபட்ச கட்டணமான ரூபா 12 இல் எவ்வித
மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை
என அமைச்சர்
இதன்போது தெரிவித்துள்ளார்.
எரிபொருள்
விலைச்சூத்திரத்திற்கு அமைய, கடந்த
வாரம் (11) எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து, தனியார் பஸ் சங்கங்களினால்
பஸ் கட்டண
அதிகரிப்பு கோரப்பட்டிருந்ததோடு, அவ்வாறு
அதிகரிக்க இடமளிக்காவிடின்,
பணி புறக்கணிப்பில்
ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தன.
இதனையடுத்து,
இன்று (19) போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால
டி சில்வாவுடன்
அச்சங்கங்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை
அடுத்து, குறித்த
முடிவுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
கடந்த
மே மாதம்
10 ஆம் திகதி
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மே
23 ஆம் திகதி
பஸ் கட்டணங்கள்
12.5% இனால் அதிகரிக்கப்பட்டதோடு, எதிர்வரும்
இரு வருடங்களுக்கு
பஸ் கட்டணங்களை
அதிகரிக்க முடியாது
எனும் நிபந்தனையின்
கீழ் குறித்த
பஸ் கட்டண
அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment