ஆடைகள் அணிவதில்
இஸ்லாமிய கலாசாரத்தைப் பேணி
வாழ்ந்து காட்டுவோம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 18ஆவது நினைவேந்தல் நிகழ்வு, கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நேற்று (16) சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.
குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம்களின் கட்சி என கூறப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தற்போதய தலைவர்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இவ்வைபவத்தில் வர்ண சாறம் (லுங்கி)
அணிந்து வருகை தந்திருந்தது அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.
இந்த வர்ண சாறமை அணிந்தவராகத்தான் தொழுகையிலும் அவர்
ஈடுபட்டிருந்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தான் அணிந்திருந்த சாறமை கணுக்காலுக்கு கீழே இறக்கி அணிந்திருந்ததைக்
காணக்கூடியதாக இருந்ததாகவும் அவ்வாறே கணுக்காலுக்கு கீழே சாறம் இறக்கப்பட்ட
நிலையில் அவர் தொழுகையில் ஈடுபட்டிருந்ததையும் சிலர் கண்டு வேதனைப்பட்டதாகவும் கவலையை வெளியிட்டதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்லாம் ஆண்களின் ஆடையை கணுக்காலுக்கு கீழே இறக்க தடை விதிக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆடையை (தரையில்
படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்)
ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (ஸஹீஹ்
முஸ்லிம் 4233)
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி (அவர்கள்) கூறுகின்றார்கள்: “ நான் மஞ்சள் நிறத்திலான
இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இவை காபிர்களுடைய ஆடைகள்.
எனவே இவற்றை அணியாதீர்!“ என்றார்கள். (முஸ்லிம்)
சமூகத்தில் புகழையும் பிரபலத்தையும் நாடி காலத்திற்கு காலம் நவீன வடிவமைப்புக்களில் வரும் ஆடைகளை அணிவது தவிர்க்கப்படல் வேண்டும் என உலமாக்கள் கூறுகின்றனர். .
முஸ்லிகளாகிய நாம் அணியும் ஆடை பல் வர்ணங்களிலும் நிறங்களிலும் இல்லாமல்
அணிவது சிறப்பானதாகும். சமூகத்தின் தலைவர்கள் எனக்கூறிக்கொள்பவர்கள் இது விடயத்தில்
முன்மாதரியாக திகழ்தல் வேண்டும்.
0 comments:
Post a Comment