சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில்
மாபெரும் சிரமதானம்
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மாபெரும் சிரமதானம் ஒன்று நேற்று 16 ஆம்
திகதி இடம்பெற்றது.
மேற்படி பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் பங்களிப்புடன் வைத்தியசாலையின் டாக்டர் ஸனூஸ் காரியப்பர் தலமையில் இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வில் இப்பிரதேசத்திலுள்ள பொது நலன் விரும்பிகள் பலர்
கலந்துகொண்டிருந்தனர்.
இச்சிரமாதான நிகழ்வில் வைத்தியசாலை சுற்றுச் சூழல்கள் துப்பரவு
செய்யப்பட்டதுடன் கடந்த பலவருடங்களாக பயன்படுத்தப்படாமல் ஒரு மூலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த
வைத்தியசாலைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் திருத்தப்பட்டு வைத்தியசாலையின்
பாவனைக்கு எடுக்கப்பட்டது.
இது மாத்திரமல்லாமல் இப்பிரதேசத்திலுள்ள தனி நபர் ஒருவரின் பங்களிப்பால்
வழங்கப்பட்ட வைத்தியசாலையின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகையும் வைத்தியசாலையின்
வளவில் பொருத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிருவாகிகள், உலமாக்கள், சாய்ந்தமருது சுயேற்சை குழு சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், புத்திஜீவிகள் ஆகியோர் தனிப்பட்ட ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் பெருந்தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 18ஆவது நினைவு நாள் 16 ஆம் திகதி நேற்று என்பதும்
குறிப்பிடத்தக்கது.
படங்கள்: யூ.கே.காலிதீன்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.