கைப்பணிப் பொருள் ஏற்றுமதி 11 சதவீதத்தால் அதிகரிப்பு
அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு



கைப்பணிப் பொருள் ஏற்றுமதி 11 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கைப்பணித்துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் கடந்த வருடம் மேற்கொண்ட சாதகமான நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அண்மையில் நடைபெற்ற ஷில்ப அபிமானி கைப்பணி தேசிய கண்காட்சி மூலம் ஒரு கோடி 20 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை வருமானமாகக் கிடைக்கப் பெற்றுள்ளது.
இது இலங்கை கைப்பணி கண்காட்சியொன்றில் பெற்றுக் கொண்ட ஆகக்கூடிய வருமானமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தக் கண்காட்சி தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரம்பரிய நெசவுக் கைத்தொழில் மற்றும் மகளிர் கைப்பணித் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கு ஜப்பானைத் தளமாகக் கொண்ட ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பாரம்பரிய மரபுரிமைகள் தொடர்பான சர்வதேச ஆராய்ச்சி மத்திய நிலையமும், யுனெஸ்கோ அமைப்பும் ஆதரவு வழங்குகின்றன.
இதுவரை அருங்கலைகள் மன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கைப்பணிக் கலைஞர்களின் எண்ணிக்கை 20 ஆயிரம் ஆகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top