இந்தோனேசியாவில் நிலநடுக்கம்,
சுனாமி பலி எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்தது
   
இந்தோனேசியா நாட்டின் சிலாவேசி தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் கடந்த 27-ம் திகதி 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. இந்த திடீர் சுனாமியை எவ்வித எச்சரிக்கை கருவிகளாலும் மதிப்பிட முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த பேரலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமி பேரலையில் சிக்கி இடிந்து விழுந்தன. ஏராளமானோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த அனர்த்தம் ஏற்பட்டு நேற்று நான்கு தினங்களை எட்டும் நிலையில் சில பின்தங்கிய பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதோடு கனரக இயங்திரங்கள் இன்றி மீட்பு நடவடிக்கைகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இடிபாடுகளுக்கு சிக்கி இருக்கு பலரும் உதவி கோரும் நிலையில் அவர்களை காப்பற்ற முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அவர்கள் உதவி கோரி வருகின்றனர். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் சிக்கியுள்ள அவர்களின் மனநிலையை சரிப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் அவர்களுக்கு ஊக்கமளித்துவருகிறோம். குடிநீர் மற்றும் உணவும் வழங்கினோம். ஆனால், அவர்களுக்கு அது தேவையில்லை. அவர்களுக்கு இடிபாடுகளில் இருந்து வெளியே வர வேண்டும்என்று மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் .எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்ததாக அந்நாட்டின் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top